பக்கம்:வையைத் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி 9. உள்ள இறைவனேப் பாடிப் பரவிப் போற்றி, மக்கள் உள்ளத்தில் தத்தம் சமயக் கருத்தைப் பரப்பி நின்ருர் கள். இந்த வகையில் தோன்றியவைகளே தேவாரம் திருவாசகம் போன்ற சைவ இலக்கியங்களும் காலாயிரம் போன்ற வைணவ இலக்கியங்களும். தேவாரத்தே சமண சமயத்தைப் பலவிடங்களில் தாக்கிப் பாடி இருப்பதை கோக்கின், அக்காலச் சமய மாறுபாட்டு கிலே நன்கு விளங்கும். பல்லவன் ம கே ங் தி ர ன் போன்றவர்களும், பாண்டியன் நெடுமாறன் போன்றவர்களும் சமணம் விட்டுச் சைவ சமயம் சேர்ந்தது மட்டுமன்றி, நாடே சைவம் நோக்கி மாறலாயிற்று. இந்தத் தேவார திருவாசக பிரபந்த இலக்கியங்களை ஒட்டிப் பிற்காலத்தில் பலப்பல சமய இலக்கியங்கள் தோன்றின. சைவ வைணவத்தில் மட்டுமின்றி, சமண சமயத்திலேயும் இதுபோன்ற தோத்திர இலக்கியங்கள் இக்காலத்தில் தோன்றி வாழ்ந்தன என்பதை அறிகிருேம். எனவே, பெரும் பாலான தோத்திர சமய இலக்கியங்கள் இவ்விடைக் காலத்தே தோன்றின என்பது கண்கூடு. காப்பியங்கள் பல வளர்ந்ததும் இக்காலமே யாகும். கம்பரை கிறுத்தியே இடைக்காலத்தை இருகூருக்கின நிலை கண்டோம். கம்பருக்கு முன்னும் பின்னும் இலக்கிய எல்லையாக அமைய அவ்வக்காலத் தில் தோன்றிய இலக்கியங்களைக் காணுதல் பொருத்த மாகும் என்பதை மேலே பார்த்தோம். கம்பரது உயரிய இராமாயணம் இக்காலத்திய சிறங்க காப்பிய மாகும். பெரிய புராணமும் இக்கால இலக்கியமே. சிலர் பெரிய புராணத்தைக் கம்பருக்குப் பிற்பட்ட தாகக் காணினும், பலருடைய முடிவு பெரிய புராணம் இராமயணத்துக்கு முந்தியது என்பதேயாம். சமணக் காப்பியங்களுள் சில்வும் இக்காலத் தொடக்கத்தில் உண்டானவைகளே என்ன்லாம். சீவக சிந்தாமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/15&oldid=921766" இலிருந்து மீள்விக்கப்பட்டது