பக்கம்:வையைத் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வையைத் தமிழ் ஒன்பதாம் நூற்ருண்டில் உண்டான காப்பியம் என்பர். வளையாபதி குண்டலகேசி எனற இரு பெருங்காப்பியங்களும் இடைக்காலத்தனவே என்பர். எனினும், அவை முழுதும் கிடைக்கவில்லை. ஐஞ்சிறு காப்பியங்களும் இக்காலத்தனவே. இவை பெரும்பா ஆம் சமண சமய உண்மைகளை வற்புறுத்துவனவாம். பெளத்தம் ஐந்தாம் நூற்றண்டிற்குப் பின் தமிழ் காட்டில் வாழவில்லையாதலால், அச்சமயம் பற்றிய இலக்கியங்கள் இல்லை. சமணம் ஏழாம் நூற்முண்டு வரை தலை நிமிர்ந்தும், பின் தாழ்ந்தும் வாழ்ந்த காரணத்தால் அச்சமய நெறிபற்றிப் பெருங்காப்பியங் களும், சிறு காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் தோன்றி வாழ்ந்தன போலும் ஒட்டக்கூத்தரும் கம்பர் காலத்தில் வாழ்ந்தவர் எனக் கணக்கிடுதலின், அவர் பாடிய இராமாயண உத்தர காண்டமும், புகழேந்தியார் பாடிய களவெண்பாவும், அவ்வையா ரின் சிற்றிலக்கியங்களும் இக்காலத்தனவேயாம். எனவே, தமிழில் உள்ள காப்பியங்களில் சிலம் பதிகாரம், மணிமேகலை என்ற இரணடையும் தவிர்த் துப் பிற காப்பியங்கள் அனைத்தும் இவ்விடைக்கால எல்லேயின் பாற்பட்டுச் சிறந்தனவே எனக் கோடல் பொருந்தும். . சிற்றிலக்கியங்கள் பலவாகப் பல்கிப் பெருகிய காலமும் இதுவேயாகும். கோவை, பரணி, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், முதலிய தொண்ணுாற்ருறு வகைப் பிரபந்தங்களும் இக்காலத் தனவே பின்னல் பாட்டியல் இலக்கணம் உண்டாகக் காரணமான இலக்கியங்கள் அனைத்தும் இக்காலத்தி லேயே தோன்றின. 'ஆதி உலா என்பதைச் சேரமான் பெருமாள் சிவபெருமானப் போற்றிப்பாடிக் கைலே அடைந்த நாள் கொண்டுதான் மலேயாள ஆண்டாகிய கொல்லம் ஆண்டு கணக்கிடப்படுகிறது என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/16&oldid=921768" இலிருந்து மீள்விக்கப்பட்டது