பக்கம்:வையைத் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி ! ţ, எனவே, ஆதி யுலாவின் காலம் ஒன்பதாம் நூற்ருண் டாகிறது. ஒட்டக்கூத்தரது மூவர் உலாவும் தக்க யாகப் பரணியும் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழும் இக்காலத்தனவே. கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கு கொண்டார் காலமும் இதுவே, கந்திக் கலம்பகமும் இந்த இடைக்காலத்தைச் சேர்ந்ததே. இவற்றுள் பரணி என்பது போர்ப்பாடலாகும், இதை ஆங்கிலத் தில் "பர்க்கு என்பவர் எழுதிய பிரெஞ்சுப் புரட்சி" போன்றது என்பர் சிலர். கலம்பக வரிசையில் முதலில் கந்திக்கலம்பகமே உண்டாயிற்று என்பர். இது பல்லவ மன்னனை கந்தி போத்தரையன் புகழ் பாடுவது. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், அச் சோழ மன்னன் சிறப்பைப் போற்றுவது. மூவர் உலா, சோழ வேந்தர் மூவர்தம் புகழ் பாடுவது. கலிங்கத்துப் பரணியும் சோழன் வெற்றியையே. குறிப்பதாகும். இவ்வாறு இச்சிற்றிலக்கியங்களெல் லாம் முதலில் மன்னர்களைப் போற்றினவாக அமைந்த போதிலும், இவை வளர வளர கடவுளரைப் போற்றும் இலக்கியங்களாகவே அமைந்துவிட்டன. கோவை அகப்பொருட் பற்றியதாயினும் அதிலும் கடவுளைப் பற்றியனவே அதிகம். மாணிக்கவாசகர் பாடியதான சிறந்த திருக்கோவையார் தில்லை. இறைவனுக்கு உரியது. இப்படியே பல அந்தாதி, கலம்பகம், மாலை, தூது, உலா முதலியன கடவுளரைச் சார்ந்தே சமயம் பற்றி எழுந்தன. அக்காலத்தில் சைவ சமயமே மேலோங்கியதாகப் பிற்காலச் சோழர்களால் வளர்க்கப் பெற்றமையின், அச்சமயத் தைச் சார்ந்த இலக்கியங்களே அதிகமாய் உள்ளன. என்ருலும், வைணவ சமயத்திலும் அந்தாதி. கலம்பகம், தூது போன்ற இலக்கியங்களும் உள்ளன. சமண சமயத்தும் திருக்கலம்பகம் முதலிய சிற்றிலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/17&oldid=921770" இலிருந்து மீள்விக்கப்பட்டது