பக்கம்:வையைத் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . . வையைத் தமிழ் கியங்களும் உள. இவற்றையெல்லாம் தனித்தனியாக எடுத்து உதாரணம் காட்டிக்கொண்டே செல்வோ விமாயின் மிக விரிவடையும் என்றஞ்சி, இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளலாம். அடுத்து இக்காலத்தில் தோன்றிய மொழி பெயர்ப்பு இலக்கியங்களைக் காணலாம், கம்பராமா யணம் ஒரு மொழி பெயர்ப்பு இலக்கியமே. வடமொழி யில் வால்மீகி எழுதியதைக் கம்பர் தமிழில் மொழி பெயர்த்தார். எனினும், அம்மொழிபெயர்ப்பை அவர் அஞ்சி அஞ்சியே செய்திருக்கின்ருர் என்பது. “வையம் என்னே இகழவும் மாசு எனக்கு எய்தவும்' என அவர் தொடங்கி, இராமாயணம் பாடியதாகக் குறித்ததிலிருந்து தெரிகிறது. தனித்த பாக்களும், கவிதைகளும், காப்பியங்களும் உண்டான தமிழ் காட்டில், வேற்றுமொழிகளிலிருந்து மொழி பெயர்த் துக் காப்பியம் செய்வதென்பது எளிதன்று. எனவே தான் கம்பர் அஞ்சி அஞ்சிச் செய்திருக்கிருர். இராமாயணக் கருத்துக்கள் பல் சங்க இலக்கிய்ங்கள்ல் வந்திருந்தபோதிலும், அக்கதையை யாரும் முற்ற மொழிபெயர்க்கவில்லை. கம்பரும் வால்மீகியின் கதையை அப்படியே மொழிபெயர்க்காது, பலவிடங். களில் தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றவகை :யிலேயே மாற்றி அமைத்துள்ளார். எனவேதான் அது இன்றும் வாழ்கிறது. இராமாயணமன்றிப் பாரதமும் இக்காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப் :பட்டது என்னலாம். பெருங்தேவனர் பாரத வெண்பா இக்காலத்தினதே. மற்றும் சமணக் காப்பியங்கள் பலவும் மொழிபெயர்ப்பு நூல்களே என்பர். சீவக சிந்தாமணியும் வடமொழியிலிருந்து வங் த தே என்பதை அறிகிருேம். வேறு சிறு சிறு தோத்திர வகைகளும் உரைகடை வகைகளும் வடமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/18&oldid=921772" இலிருந்து மீள்விக்கப்பட்டது