பக்கம்:வையைத் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி \፣» யையும் காட்டு நிலையினையும் ஒட்டி இக்காலத்து. எழுதப்பட்டன. ஈடு போன்ற உரைகள் இக்காலத்தில் எழுந்தமை கொண்டும்,இரணிய கருப்பம், துலாபாரம், பிரமதேயம் முதலிய வகைகளில் அந்தணர்களுக்கு. மன்னர்கள் வழங்கியுள்ளமை கொண்டும், இக்காலத்து இலக்கிய வளர்ச்சியில் வட மொழி ஆதிக்கத்தை கன்கு உணரலாம். இக்காலத்திலேதான் அதிகமான வட மொழிச் சொற்கள் தமிழில் வங்து வழங்கின என்பது. கண்கூடு. சமண சமயத்தை வளர்க்கவும், சைவ' வைணவத்தொடு கலந்த வைதிக சமயத்தை வளர்க்க வும் வடகாட்டுக் கொள்கையைப் பரப்பவும் முயன்ற, பலர் இக்காலத்தில் பல வடமொழிச் சொற்களே இலக் கியங்களிலும், உரைகடையிலும், கல்வெட்டுக்களிலும் புகுத்திவிட்டனர்.எனினும்,அக்கலப்புகள் இயற்கைக்கு மாருக-மக்கள் வாழ்க்கை நெறிக்கு மாறுபட்டன. வாக-அமைந்த காரணத்தால், கிலேத்து வாழ வழி' யற்றனவாகி, இன்று வழக்கழிந்து வீழ்ந்துவிட்டமை யையும் காண்கிருேம். வடமொழிக் கருத்துக்களையோ சொற்களையோ அதிகம் கலவாத இலக்கியங்கள் பிற். காலத்தில் ஏற்றம் பெற்றமை போன்று அதிகம் கலப் புடையன வாழவில்லே என்பது கண்கூடு. இனி, இக்காலத்தில் தோன்றி வளர்ந்த மற்ருெரு. வகை இலக்கியம் உரைகடை இலக்கியமாகும். தொல் காப்பியர் காலங்தொட்டு எழுந்த இலக்கிய இலக்கணங்’ களே விளக்கிய காலம் இதுவேயாகும். தொல்காப்பியத் துக்கும், திருக்குறள், புறகானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களுக்கும் நல்ல உரைகள் இக் காலத்தில் வெளிவந்தன. பதினென்ரும் நூற்ருண்டு தொடங்கிப் பதினரும் நூற்ருண்டு வரையில் வாழ்ந்த அறிஞர் பலர் தமிழ்ப் பேரிலக்கணமாம் தொல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/19&oldid=921774" இலிருந்து மீள்விக்கப்பட்டது