பக்கம்:வையைத் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ግ4 வையைத் தமிழ் காப்பியத்திற்கும் பிற இலக்கியங்களுக்கும் உரை கண்டனர். தமிழில் உரை நடை தோன்றிச் சிறக்க வளர்ந்த காலம் இதுவேயாம். தொல்காப்பியத்திலே உரை நடை பற்றிய குறிப்புக்கள் உளவேனும், அக் காலத்து உரை நடைபற்றி நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை. சிலப்பதிகாரத்தில் ஒரளவு உரை கடை யை உணர்கின்ருேம். எனினும், இந்த இடைக் காலந்தான் உரை நடை இலக்கியத்தை நன்கு தோற்று வித்து வளர்த்தது என்னலாம். எட்டாம் நூற்ருண் டில் எழுந்த இறையனர் களவியல் உரை எல்லா உரை களுக்கும் முன்னேடி என்பது உண்மையாகும். பின்னர் உரையாசிரியர் பலர் நல்ல உரைகளை எழுதி யுள்ளனர். அவருள் சிறந்தவராகக் காண்கின்றவர் இளம்பூரணர், நச்சிர்ைக்கினியர், பரிமேலழகர், சேன வரையர், அடியார்க்கு கல்லார் என்பவராவர். இவர் கள் பிற நூல்களுக்கு விளக்கமாகத் தத்தம் உரைகளே செய்தார்களேனும், அவற்றுள் இவர்கள் புலமை கலமும் பிற கல்லியல்புகளும் தெரிகின்றன. அத் துடன் தமிழில் உரைநடை இலக்கியமே இவர்களாலே தான் வளர்ச்சியுற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகின்றது. எனவே, இவ்விடைக்காலம் உரை நடை இலக்கியத்தை வளர்த்த பெருமையைக் கொண்டது. கல்வெட்டு இலக்கியம் இக்காலத்துத் தோன்றிய மற்ருெரு சிறந்த பகுதி. எட்டிலே எழுதி நாட்டில் உள்ளாருக்கு அறிவுறுத்திய தமிழகம் தன் எழுத்துக் களே என்றென்றும் வாழவைக்கக் கருதிற்றுப்போலும். எனவே, அது கற்களின் துணையை காடிற்று. இத் தமிழ் நாட்டில் இடைக்காலத்திலேதான் பல்லவ ராலும், பிற்காலச் சோழராலும் பலப்பல கற்கோயில் கன் எழுந்தன. தேவாரத்தாலும் பிரபந்தத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/20&oldid=921776" இலிருந்து மீள்விக்கப்பட்டது