பக்கம்:வையைத் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி 15 போற்றப் பெற்ற அருள் நலம் சான்ற ஊர்களில் இறைவனுக்கு அரசர்கள் கோயில் அமைத்தார்கள்; அக்கோயில்களைக் கலைவாழ் இடங்களாக்கினர்கள். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கோயில் களில் போற்றி வளர்க்கப் பெற்றன. அவற்றுடன், அக்கோயிலின் சுவர்களையெல்லாம் பைந்தமிழ் பேச வைத்தனர். அரசரும் பிறரும் செய்த அறங்களைப் பற்றிய செய்திகளையெல்லாம் அம்மதிற்கவர்களில் செதுக்கிவைத்தனர். அப்படி வைக்கும் போது அவ்வக் காலத்தில் வாழ்ந்த அரசர்களைப் பற்றியும், அவர்களது வீரம், கொடை, பண்பு முதலியன பற்றியும் நன்கு பொறித்து, அத்தகைய மன்னர்தம் இன்ன ஆட்சி ஆண்டில் இன்னர் இன்ன வகையில் செய்த அறம் என்பதையும் பொறித்தனர். இப்படி ஊர்தொறும் பலப்பல கல்வெட்டுக்கள் தோன்றின. இன்று இந்திய அரசாங்கத் தொல் பொருள் ஆய்வுப்பகுதி இவைகளை யெல்லாம் படியெடுத்து ஆராய்கின்றது இக்கல் வெட்டுக்கள் தமிழ் நாட்டு இலக்கியங்களாகவே போற்றப்படுகின்றன. இவற்றின் முற்பகுதி பெரும் பாலும் அகவற்பாவாலும், பிற்பகுதி உரைநடை யாலும் அமைந்துள்ளன. இந்த இலக்கியத்தில் அதிக மாக வடமொழிச் சொற்கள் எடுத்தாளப்படுகின்றன. அக்கால நாட்டு மன்னரும் மக்களும் வடமொழியை எடுத்தாள்வது பெருமையெனக் கருதினர் போலும்! என்ருலும், அக்கல்வெட்டுக்களும் நல்ல தமிழ் இலக் கியங்களாய் விளங்கி இடைக்காலத்தில் சிறந்திருந்தன என்பதில் ஐயமில்லை. - மேற்கண்ட இருவகை இலக்கியங்களிலும் உண் உான பிறமொழிக் கலப்புகள் திடீரென ஒரே காளின் காட்டில் புகுந்துவிடவில்லை. முன்னர்க் கண்ட அந்த இருண்ட காலத்தில் தமிழ் காட்டில் புகுந்த இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/21&oldid=921778" இலிருந்து மீள்விக்கப்பட்டது