பக்கம்:வையைத் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 வையைத் தமிழ். கலப்பு, மெள்ள மெள்ள நூற்ருண்டுதோறும் வளர்ந்து வந்தது என்னலாம். மொழியில் மட்டு மின்றி, மக்கள் வாழ்விலும், பண்பாடு முதலியவற்றி லும் பிற காட்டாருடைய கலப்புக்கள் குடி புகுந்தன. என்ருலும், அவை அனைத்தும் தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கை நெறிக்குப் புறம்பாக உள்ளமையின், மெள்ள மெள்ள விலகி விலகிச் செல்ல, உண்மை நிக்ல மக்களால் உணரும் நிலையில் இன்று நாடும் மொழியும் சிறப்பதை அறிகிருேம். மேலே கண்ட இவ்வாருன இலக்கியங்களேயன்றி வேறு பல பா வகைகளும் தாழிசை முதலிய இனங் களும் இக்காலத்தில் காட்டில் தோன்றி வளர்ந்தன. ஆங்கிலத்தில் காணும்'.பாலட்' போன்ற சிறு தாழிசை களும் பிறவும் இக்காலத்தில் தோன்றின. மற்றும் மத்த விலாசப் பிரகசனம் போன்ற பிற மொழி நாடகங்களுக்கு இடையில் இராசராச விலாசம், கொண்டி நாடகம் போன்ற நாடக இலக்கியங்களும் இக்காலத்தே தோன்றி வளர்ந்தன. ஆங்கிலத்தில் காணும் இன்பியல் துன்பியல் நாடகங்கள் போன்ற பெரும்பிரிவுகளில் அன்று நாடகங்கள் இல்லை என்ரு. லும், இடைக்காலத்தில் நாடக இலக்கியமும் ஒரளவு வளர்ந்ததோடு, ஊர்தொறும் நாடகங்கள் நடிக்கப் பட்டன என்பதையும் அறிகிருேம். மற்றும் சிட்டுக்கவி போன்ற சிறு கவிதைகளும், சில வழிகடைப் பாடல் களும் இக்காலத்தில் உண்டாயின. இவற்றின் அடிப் படையிலேதான் பிற்காலத்தில் வழிகடைப்பதம் போன்ற கீர்த்தனே நூல்கள் உண்டாயின என்பது. பொருந்தும். இசைத் தமிழ் இக்காலத்தில் நன்கு வளர்ச்சியுற்றி ருந்ததென்பதைத் தேவாரத்தில் உள்ள பண்வகைகள் மூலம் நன்கு உணரலாம். எத்தனையோ வகையான 1. Ballad

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/22&oldid=921780" இலிருந்து மீள்விக்கப்பட்டது