பக்கம்:வையைத் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி 1ገ பண்கள் இன்றைய உயர்ந்த இசைப் புலவர்களாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் உள்ளன. இசை வகையும் இசைக்கருவிகளும் பலவாகப் பல்கிப் பெருகின. கோயில்களில் பிற்காலத்தில் பண்ணுென்றப் பாடுவாருக்குப் பல தானங்கள் அளித்ததைக் கல் வெட்டுக்கள் மூலம் அறிகிருேம். இப்படி இசைத் தமிழும் இடைக்காலத்தில் வளர்ச்சியுற்றது. இலக்கியமேயன்றி இலக்கணமும் இக்காலத்துத் திற்ம்பட எழுதப்பட்ட தென்னலாம். இக்கால இலக் கியங்கள் இலக்கணத்துக்கு வழி காட்டியாய் அமைக் தன. சிற்றிலக்கிய அடிப்படையில் அமைந்தனவே பாட்டியல் நூல்கள். மற்றும் அகப்பொருள் இலக் கணமும், புறப்பொருள் வெண்பா மாலே போன்றி நூல்களும் இக்காலத்தனவே. இன்றளவும் தமிழுக்குச் சி ற ங் த இலக்கணமாகத் தொல்காப்பியத்துக்கு அடுத்து வைத்து எண்ணப்பெறுவதும் மக்கள் பலருக்கும் அறிமுகமானதுமான நன்னூல் இக் காலத்ததேயாகும். இக்காலத்தில் தமிழ் நெறி வழக்குக்கு மாறுபட்டு எழுந்த நேமிநாதம் போன்ற இலக்கண நூல்கள் பிற்காலத்தில் வழக்கற்று விட்டன என்பது காண்கிருேம். இப்படிப் பலப்பல வகையில் இடைக்கால வளர்ச்சியைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்; ஒவ்வொரு பகுதி பற்றியும் ஒவ்வொரு தலைப்பில் தனித்தனிப் பெரும்பேச்சு நிகழ்த்தலாம்; பெருநூலும் எழுதலாம். என்ருலும், கால எல்லே கருதி இத்துடன் அமைகிறேன். இடைக் காலம் பிறமொழிக் கலப்புக்கிடையிலும், பிற வேறு பாட்டுக்கிடையிலும் கழிந்தது என்ருலும், அது சங்க காலத்தை அடுத்து, பல்வகையில் தமிழ் இலக்கியத் தைப் போற்றி வளர்த்து வாழ வைத்த ஒரு பொம் காலம் என்பதைத் தமிழர் உணர்ந்து, அக்கால வரலாற்றை இலக்கியத்தொடு பொருத்தி ஆராய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/23&oldid=921782" இலிருந்து மீள்விக்கப்பட்டது