பக்கம்:வையைத் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மாதவி மாண்பு இலக்கியங்களில் எத்தனையோ பாத்திரங்கள் பேசுகின்றன; பேசப்பெறுகின்றன; ஆசிரியர்களால் நன்கு விளக்கி காட்டப் பெறுகின்றன; ஆசிரியர் ம்னநிலையில் மட்டுமின்றி, காப்பிய நிகழ்ச்சிகளே ஒட்டியும் இப்பாத்திரங்கள் ஏற்றமுறவும் தாழ்ச்சி யுறவும் நேரிடுகிறது. சில பாத்திரங்கள் படைப்பார் கைப்பாவையாகி நிற்பதோடு அன்றிப் பயில்வார் கைப்பாவையாக நின்று இடர்படுவதையும் காண் கிருேம். ஏதோ ஒரு கொள்கையை உளத்திற் கொண்டு, அக்கொள்கை வழியே தாம் பயில எடுத்துக்கொண்ட காப்பியப் பாத்திரங்களைப்பற்றி ஆராயும் மக்கள் காட்டில் அதிகம் உள்ளமையின், பல காப்பியப் பாத்திரங்களின் உண்மை நிலை விளங்காமலே போகின்றது. அத்தகைய பாத்திரங் களுள் ஒருத்தியே சிலப்பதிகார மாதவி. சிலப்பதிகாரத்தைப் பயிலத் தொடங்குபவர், கோவலன் அவன் கற்புடை மனைவி கண்ணகி ஆகிய இருவரையும் உயர்த்திக் கண்டு, அவர்தம் வாழ்வு கேடுறக் காரணமானவள் மாதவியே என்ற முடி வுடனேயே தொடங்குகின்றனர். எனவே, பயில் வாருக்கு மாதவி ஒரு மாசுற்ற கணிகை மகளாகவே காட்சி தருகின்ருள். ஆயினும், இலக்கியத்தை கன்கு ஆராய்ந்து பயிலின், மாதவியின் குணநலச் சிறப்பும், பரத்தையர் குலத்தில் பிறந்த போதிலும் குன்ரு ஒழுக்க நெறி நின்ற பண்பும் கன்கு விளக்கமுறும். மாதவியைப் பற்றிக் கூறும் இலக்கியங்கள் இரண்டு; ஒன்று; சிலப்பதிகாரம்; மற்ருென்று, மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/24&oldid=921784" இலிருந்து மீள்விக்கப்பட்டது