பக்கம்:வையைத் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாைதவி மாண்பு . 19 மேகலை. இவ்விருகாப்பியங்களுள்ளும் மாதவி ஒரு சிறந்த பாத்திரமாகத்தான் காட்டப் பெறுகின்ருள் என்பது ஊன்றிப் பயில்வாருக்கு நன்கு விளக்கமுறும். மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தாள் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனல் அக்குலப்பிறப் பிற்கு அவளா காரணம்? குப்பையில் மாணிக்கம் கிடைப்பது போன்று, அந்தக் கணிகையர் குலத்தில் பிறந்து, நல்ல குலப்பிறப்பில் வாழும் மாதர்கள் போன்று வாழ்ந்தவள் மாதவி என்பதை அறியும் போது அவளைப் போற்ருதிருக்க முடியுமோ? கோவலன் ஊழ் வினையால் மனைவியோடு மதுரை. சென்று தன் உயிர் விட்டான் என்ருல், அதற்குக் காரணம் மாதவி ஆகமாட்டாள் என்ற உண்மையை இளங்கோவடிகள் பல இடங்களில் எடுத்துக் காட்டு கின்ருர். கோவலன் குடும்பச் சீரழிவுக்கு மாதவிதான் காரணம் என்று நினைத் திருந்த மக்கள் உள்ளங்களே யெல்லாம் மாற்ற இளங்கோவடிகளும் சாத்தனரும் எத்துணைப் பாடு பட்டுள்ளனர் என்பதை இரு நூல்கள் வழியும் காணின் உண்மை விளங்காமற் போகாது. உண்மையில் கோவலனை வாழ வைத்தவள் மாதவியே என்று கூறினும், அது தவரு காது. அக் கோவலன் பெற்ற பொருளை மாதவி மாட்டு இழந்தான். எனவே, அவன் வாழ்வு கேடுறக் காரணமானவள் மாதவியே, என்றுதான் பலரும் கூறுகின்றனர். எனினும், நூல் வழியே காணின், கோவலன் பொருள் அனைத்தும் மாதவியிடங்தான் சென்று சேர்ந்தது எனக் கூற முடியாது. மாதவி இயல்பிலேயே செல்வம் பெற்றவள். அரசன் அவைக் களத்துத் தன் ஆடலே அரங்கேற்றிக் காட்டினள் என்ருல், அதற்கேற்ற தகுதியும் செல்வ வாழ்வும் பிற சிறப்புக்களும் அவள் பெற்றிருப்பாளல்லளோ? அவள் கோவலனத் தன் வழி ஈர்த்தாள் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/25&oldid=921786" இலிருந்து மீள்விக்கப்பட்டது