பக்கம்:வையைத் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 < வையைத் ಆಖಿ கூற முடியாது. மாலே வாங்குநர் சாலும் நம் கொடிக்கு எனக் கூறிய மொழி வழிய்ே கோவலன் சென்ருன்; பின்னர் அவளோடு கூடி வாழ்ந்தான்; கண்ணகியால் பெற முடியாததாகிய மக்கட்பேற்றினே மாதவி வழிப்பெற்ருன்.மாதவி பொருள் வேண்டினள் என்ருே, அன்றிக் கோவலன் தன் பொருளை அவளிடம் கொண்டு சேர்த்தான் என்ருே யாரும் காட்டவில்லை. எனவே அவளாலேதான் கோவலன் பொருள் கெட்டது என்று எப்படிக் கூற முடியும்? மாருக, அவன் மற்ற நண்பர்களுடன் சேர்ந்தோ, வேறு வகையிலோ, கன்னே மாதவி நன்கு மதிக்க வேண்டும் என நினைத்தோ பொருளை வாரி இறைத் திருப்பான். அழகிய மாதவியோடு ஆடிய கொள்கை யில் பெரும். பொருள் கெட்டது, எனக் காட்டு கின்ருரே ஒழிய, இளங்கோவடிகள் மாதவியாலேயே கோவலன் பொருள் கெட்டது எனக் காட்டவில்லை. பதிகத்தில், . 'நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையோடு ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுற' (15, 16) என்று காட்டுகின்ருர் இளங்கோவடிகள். மற்றும் மாதவி பிறந்த குலம் கணிகையர் குலமே என்ருலும், நல்ல குலத்தில் குன்ருக் கொழுங்கொடிச் செல்வியே. மாதவி என்பதை அவள் செயல்வழி அறியலாம் என்ற உண்மையே, # "சிறப்பில் குன்ருச் செய்கையோடு பொருந்திய பிறப்பிற் குன்ருப் பெருந்தோள் மடங்தை தாதவிழ் பூங்குழல் மாதவி M. (அரங். 5-7) என்று விளக்குகின்ருர். அவள் செயல்களுக்கும், அவற். றின் தூய்மைக்கும், அவள் நல்ல குலப் பிறப்பாட்டியி லும் குன்ரு ஒழுக்கமுடையவள் என்ற கொள்கைக்கும் இதனினும் வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/26&oldid=921788" இலிருந்து மீள்விக்கப்பட்டது