பக்கம்:வையைத் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 வையைத் தமிழ் அதுதானே? பாரதியார் தமது ஞானப்பாடலுள் கயாண்டும் இன்பம் நிறைய வேண்டின் செயலாற்ற வேண்டிய வழியினைக் காட்டுகின்ருர்: 'யாண்டும்.இந்த இன்பவெள்ளம் என்றும்கின்னுள் வீழ்வதற்கே வேண்டும் உபாயம் மிகவும்எளிதாகுமடா! "சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை தோத்திரங்கள் இல்லைஉளம் தொட்டுகின்ருல் போது மடா! தவமொன்றும் இல்லை.ஒரு சாதனையும் இல்லையடா! சிவமொன்றே உள்ளதெனச் சிந்தைசெய்தால் போதுமடா! என்று பாரதியார் உபாயங் கூறுவதை உணர்வார் ..உண்மையில் இன்பம் பெற்றவராவர். தம் இளமையில் இந்த உண்மை உணர்ந்து துன்பங்களை ஏற்றுக்கொள்ளாது தாம் எண்ணி வாடிய நிலையின, - எதனி லேனும் கடமை விளையுமேல், எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும் அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலுமென்று அறம்வி திப்பது அப்பொழுது ஒர்ந்திலேன். ' (சுயசரிதை) என எடுத்துக் காட்டுகின்ருர். இவ்வாறு எத்துணே எடுத்துக்காட்டினும், மனித நெஞ்சம் எளிதில் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த நெஞ்சொடு சேர்ந்து வாழமுடியாத உண்மையைப் பலர் வருந்திப் பாடியுள்ளனர். நெஞ்சம் அஞ்சுவது அஞ்சி, அறநெறி கின்று ஆண்டவன் நிலை அறியப்பெற்ருல், இங்க இன்ப உணர்வு தாகை ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவரும் என்ற உண்மையை உணர்ந்த பாரதியார் நெஞ்சினை கேர் நிறுத்திப் பேசுகின்ருர், அவர் தம் நெஞ்சுக்குக் கூறியனவாக அப்பாடல்கள் அமையினும், மனிதராய் வாழ்வார் ஒவ்வொருவருக்கும் அவ்வுணர்வெழுத்துக் கள் பயன் உடைனவேயாம். இதோ அவர் வாக்கு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/82&oldid=921910" இலிருந்து மீள்விக்கப்பட்டது