பக்கம்:வையைத் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை கோடி இன்பம் 75; எனவே, இல்லற வாழ்வினை மேற்கொள்பவராயி னும், துறவறத்தாராயினும், யாராயினும், கடவுள் கெறியும் கடமை உணர்வும் பெற்று வாழ்வார்களா யின்-வாழ்வாங்கு வாழ்வார்களாயின் - அவர்கள் என்றும் துன்பத்தால் சோர்ந்து விழாது இன்ப கிலே யிலேயே நிற்பர் என்பது உறுதி. ஆனால், இந்த இன்ப நிலைக்கு அடிப்படை அன்பே என்பதை மனிதன் உணர வேண்டாவா? இந்தஉண்மையை உணராமையினலேதான் இன்பத்திடை யிலும் மக்கள் துன்புற்று வாடுகின்ருர்கள். உள்ளம் தூய்மையாகக் கொண்டு, அன்புள்ளத்தால் அனே' வரையும் ஒத்துநோக்கி வருவதை ஏற்ருல், வருத்தம். உண்டோ? என்று கேட்கின்ருர் பாரதியார். 'அன்பென்று கொட்டு முரசே!-அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டுமுரசே! துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ் குதுப் பிழைகள் போல்ை' (அன்). இவ்வாறு இனிய அன்பிலைன்றி வேறு உபாயங்களால் இன்பத்தைப் பெறமுடியாது. உலகம் பொய்; துன்பம் நிறைந்தது, என்று கூறிக் காடு கடந்து கங்த மூலாதிகளே உண்டு, இன்பம் தேடும் துறவியாயினும் சரி, சாத்திரங்கள் கோத்திரங்கள் தவம் என்று காட்டிச் சாதனைகள் செய்வதாக மக்களே ஏமாற்றி வாதம் புரிந்து வையத்தே இன்பத்தை வாழ வைப்போம்: என்று கத்துபவராயினும் சரி; மற்றவரை வாட்டி, வன்பால் வழக்கிட்டு வெற்றி காண்பதாக எண்ணும். செல்வச் செருக்காளனயினும் சரி, எவரும் உண்மை யில் அனைத்தையும் ஒத்து நோக்கிப் பாவித்துப் பரவி அன்பால் அணேத்து வாழ்ந்தாலன்றி, இன்பம் காண முடியாது என்பது பாரதியாரது அசைக்க முடியாத கம்பிக்கை! ஏன்? உலகம் உண்டான நாள் முதல் இன்று வரை உண்மை அன்பர்கள் காட்டும் நெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/81&oldid=921908" இலிருந்து மீள்விக்கப்பட்டது