பக்கம்:வையைத் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. வையைத் தமிழ் இவ்வாறு பரந்த வான முகட்டிலும் வாழும் வையத்திலும் துன்பத்திடை இன்பம் காண்பார் மிகச் சிலரே. பாரதியார் அவ்வாறு தம்மை மறந்து, இன்பங், கண்டவர். தரணியை நினைந்து, அதன் வாழ்வே தன் வாழ்வாக எண்ணி, எதுவரினும் அஞ்சாது ஏற்று, துன்பம் கண்டு சிரித்து, சென்றது கருதாது நாளேச் சேர்வது கினையாது வாழும் மனிதன், எல்லா வற்றையும் இன்பமாகவே கொள்வான் என்பது உறுதி. அதிலும், கடவுட்பற்றும் கடமை உணர்வும் பெறுபவர்கள் திட்டமாக இந்த இன்பநிலையில் வாழ். வார்கள். இதேைலதான் பல் வேறு இன்னல்களுக்கு. உட்பட்ட அப்பர் பெருமான், ‘இன்பமே எங்காளும் துன்பமில்லே! என்றும்; மணிவாசகர், 'யாதும் அஞ்சோம்' என்றும் பாடி மகிழ்ந்து தம்மை மறந்து கின்றனர். இதையே பாரதியார் தமிழ்ச்சாதியின் மேல் வைத்து, தெய்வம் மறவார் செயும்கடன் பிழையார் ஏதுதான் செய்யினும் ஏதுதான் வருந்தினும் . இறுதியில் பெருமையும் இன்பமும பெறுவார்." - (தமிழ்ச்சாதி. 50). என்று சிறப்பித்துக் காட்டுன்ருர். மற்றும் ஆண்டவன் அருள் பெற்ற துறவிகள் மட்டுமின்றி அறமாற்ற: இல்லறத்தில் இயங்கும் நல்லவருங்கூடக் கடமை வழக்கருத்திருத்தி வாழ்வார்களாயின, வஞ்சக் கவலே. அவர்களே ஒன்றும் செய்யாது என்கின்ருர்; 'தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்ணும் கேட்கப் பாட்டும் காணருல் உலகும் - - * ~ * * ............. என்றுமிங் குளவாம்; (எனவே)......... சலித்திடாய் ஏழை நெஞ்சே வாழி! நேர்மையுடன் வாழி! வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் மன்னே?" (தோத். 101) எனத் தருக்கிப் பாடுகின்ருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/80&oldid=921906" இலிருந்து மீள்விக்கப்பட்டது