பக்கம்:வையைத் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை கோடி இன்பம் ዝ$

girl! kiss me right now sweet heart!” grair/D. வேடிக்கைத் தொடர்தான். அக்குறியீட்டு எழுத்துக் களில் ஒவ்வொன்றும் ஈண்டு ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்தாய் இருப்பதோடு, இத்தொடரும் வேடிக்கையானதாய் இருப்பதால், அ ப் படி யே பலருக்கு மனத்தில் பதிந்துவிடுமன்ருே? இப்படி 40,000°C சூட்டிலிருந்து 2000°C சூடுவரையுள்ள .பலப்பல கோளங்களின் வண்ணம், கிலே, தன்மை, முதலியவற்றை விஞ்ஞானிகள் ஆய்ந்துகொண்டே -யிருக்கின்ருர்கள். அவற்றின் தன்மைகளையும் அவை அனைத்தும் பஞ்சபூதச் சேர்க்கையாலே உருப் பெற்றன என்ற உண்மையையும், அதனைக் கண்டு கருத்திருத்திப் போற்ற உடம்பொடு இணைந்த உயிர் வாழ்வு தேவை என்பதையுமே அன்றே பாரதியார் அழகாகப் பாடினர். ஆம்! இதல்ை-இந்த உண்மை அறிவால்-உணர்வால் மனிதன் எத்தனையோ கோடி இன்பம் பெறுகின்ருன்! இத்தனை இன்பங்களின் உணர்ச்சிப் பெருக்கிலேதான் மனிதன் தன்னை மறந்து, தான் அவனகி, எல்லாவற்றையும் உணரும் முடிவில் ஆற்றனுடையனகி முத்தியென்கின்ற இறவா கிலையினே எய்துகின் ருன் என விளக்கிக் காட்டுகின்ருர் பாரதியார். இது போன்ற உலகியல் தோற்றங்கள் பற்றியும் அவற்றின் வண்ண விளைவுகள், கூறுபாடு கள், அமைப்புக்கள் பற்றியும் பல ஆயிரம் ஆண்டு களாகத் தமிழ் நாட்டில் அறிஞர்கள் தொட்டுக் காட்டிக்கொண்டே சென்றிருக்கிருர்கள். அவருள் பரிபாடல் இசைத்த கீரந்தையாரும் பத்திப்பாடல் அபாடிய மாணிக்கவாசகரும் முக்கியமானவர். அவர் தம் பாடல்களையெல்லாம் ஈண்டு விரிப்பின் பெருகும் என அஞ்சி, மேலே பாரதியார் காட்டிய வழியே செல்ல நினைக்கின்றேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/79&oldid=921902" இலிருந்து மீள்விக்கப்பட்டது