பக்கம்:வையைத் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வையைத் தமிழ் பலப்பல வண்ண உருண்டைகளை வான வீதியிலே காண்கின்ருன். இன்றைய அறிவியல் ஆராய்ச்சி வண்ணக் களஞ் சியமாகிய வானில் தொங்கும் உலக உருண்டைகளை யும் அவற்றின் வண்ண வகையையும் குட்டு வகையை யும் கமக்குக் காட்டுகின்றன, பல விண் மீன்களும் கோள்களும் சுமார் 2000°C சூடு தொடங்கி 40,000°C குடு வரைபெற்று மனிதன் கண்ணுக்கு எட்டிய அளவு வான வீதியில் வட்டமிடுகின்றன. இவை போன்ற்ே. மிகக் குளிர்ந்த விண்மீன்களும் உள்ளன, இவற்றை யெல்லாம் ஆராயும் ஆய்வுக்கள விஞ்ஞானிகள் இவற் றின் வண்ணக் களஞ்சியங்களே வரையறுக்கின்ருர்கள். குளிர்ந்தவை சிவப்பாகவும் குடுள்ளவை மஞ்சள் நிறம் பெற்றுப் பிறகு நீலமாகவும் மாறுவன எனக் காண் கின் ருர்கள். விண்மீன் வரிசையில் ஒன்ருன சூரியனில் எழு வகை நிறங்கள் உள்ளன என்பதை நாம் அறிக் துள்ளோம். இப்படிப் பலப்பல விண்மீண்களும் கோள்களும் பலப்பல வண்ணங்களோடு, பலப்பல குட்டு நிலைகளோடு, வான வீதியில் வலம் வருகின்றன. அவற்றையெல்லாம் தாம் அறிந்த வரையில் ஒருவாறு ஆய்ந்து வகைப்படுத்தியுள்ளனர் அறிவிய லறிஞர், 40,000°C முதல் 2000°C வரை குடுள்ளவற்றை அவற்றின் தகுதிக்கு ஏற்பப் பிரித்துள்ளனர் என <ssó 69307th O.B.A.F.G.K.M.R.N.S H. grei pi 40,000°C முதல் 2000°C வரை அவர்கள் ஒவ்வோர் எழுத்தையும் தனித்தனி அடையாளக் குறியீடுகளாக அமைத்துள்ளனர். அவற்றின் விளக்கங்களையெல் லாம் அத்துறையில் வல்ல அறிஞர்களே (Physics) காட்ட வல்லவர்கள். எனினும், இக்குறியீட்டு எழுத்துக்களேச் சுலபமாக மனத்தில் அமைத்துக் கொள்ள வேடிக்கையான ஒரு தொடர் வழக்கத்தில் உள்ளது என்ருர் ஓர் அறிஞர். அது "Oh, be a fair

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/78&oldid=921900" இலிருந்து மீள்விக்கப்பட்டது