பக்கம்:வையைத் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை கோடி இன்பம்! 7? அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பலகல் அககுகள் சமைத்தாய் (எத்) முத்தியென் ைெருகில சமைத்தாய்-அங்கு முமுதினை'யும்.உணரும்.உணர் வமைத்தாய் பத்தியென் ைெருநிலை வகுத்தாய்-எங்கள் L1JDm! Lıgınm! LuJlnm ! (எத்) என்று தன்னை மறந்து பாடுகின்ருர். இதில் அவர் பெற்ற இன்ப எல்லையை நம்மால் அளவிட முடிய வில்லே. இன்பம் எப்போது எவ்வகையில் எப்படிப் பிறக்கிறது: உலகு, எங்கும் இயற்கை அழகுச் செல் வத்தை வாரி வழங்குகின்றது. ஆனால், அந்த அழகை உயிர்ப் பொருள்கள்ே-சிறப்பாக அறிவுடை மனிதர் களே அனுபவிக்க இயல்கிறது. மனிதராய்ப் பிறந்தும், அறிவு திரிந்து, உணர்வு கெட்டு, அழகை அழிக்கும் வன்கண்ணரைப் பற்றி ஈண்டு நான் கூறவில்லே. ஆல்ை, இணைந்த நல்லுயிர்கள் இன்பத்தைத் துய்க் கும் மெய்யறிவினையே போற்றுதல் நம் கடன். 'சித்தினை அசித்துடன் இணைக்கும் கிலே இறைவ அலுடையது. உயிரற்ற உடலையும் உயிரையும் ஒன்றப் பிணைக்கின்ருன் இறைவன். பின்பு அது அனேத்தையும் கண்டும் காட்டியும் ஆக்கியும் போக்கியும் செயலாற்று கின்றது. ஐம்பெருபூதச் சேர்க்கையால் ஆகிய உலகில் அசித்தொடு சேர்ந்த சித்தாகிய உயிர்ப் பொருள் பல தொழில் புரிகின்றது. அந்த உயிராகிய மனிதன் ஆராயும் ஆய்வுக் களத்தில் பலப்பல காட்சிகள் தெரி கின்றன. அக்காட்சிகள் அனைத்தும் முற்ற முடிந்த காட்சிகளல்ல பரந்து கிடக்கும் அண்டகோள வான் முகட்டின் அளப்பருங்காட்சியில் ஒரு துளிக் காட்சியே மனிதன் காண்பது. ஆயினும். அதற்குள் அவன் கானும் அழகும் விந்தையும் அளவிடற்கரியன. "அத்தனே உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப் பல உலகுகள் சமைத்த திறனே ஆய்ந்து காண முற்பட்ட மனிதன், பாரதியார் காட்டியபடி இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/77&oldid=921898" இலிருந்து மீள்விக்கப்பட்டது