பக்கம்:வையைத் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வையைத் தமிழ் 'ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர்இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் ஆவணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பணிவார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்; இன்ன தம்மஇவ் வுலகம்! இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே' - (புறம் 194) என்று காட்டி, கல் இயல்புணர்ந்த கற்ற அறிஞர்கள் இன்ன உலகத்தில் இனிமை காண வேண்டும் என்கின் முர். ஆம்! அவ்வாறு உலகெங்கணும் இனிமை கண்டு மகிழ்ந்தவர் பலர். அவருள் நப நூற்ருண்டிற் சிறங் தவர் பாரதியார். அவர் இறைவனே நோக்கி, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!' என எக்களித் துப் பாடுகின்ருர். ஆம் துன்பத்தையும் இன்பமாகக் கண்டு போற்றுகின்றவர் உயர்ந்த பண்பாடு உடை யவரே! . பாரதியார் எத்தனை கோடி இன்பம் வைத்தாய்" என்று பாடும் பாட்டில் தம்மை மட்டும் நினைத்துக் கொள்ளவில்லை; பரந்த உலகத்தையும் பார்க்கின்ருர்; உலக எல்லேக்கு அப்பால் விளையும் இயற்கை விநோதங் களையும் எண்ணுகிருர், இறைவன் தோற்றுவிக்கும் அண்ட கோளங்களைத் தம் அகக்கண்ணுல் அளக்கின் ருர்: அக்கோளங்கள் வாரி வீசும் வண்ண ஒளிகளை நினைக்கின்ருர்; அதன் உள்ளீடாக விளக்கும் அழகினே -அழகே வடிவான ஆண்டவனே-அவ்வாண்டவனது அடியவர் திறத்தை-அவர்தம் முடிவில் ஆற்றல் உடைமையை எண்ணுகின்ருர். அந்த எண்ணமெல் லாம் பாட்டாக உருபபெற்றுஓேடி வருகின்றன. 'எத்தனைகோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவ, இறைவா! சித்தன அசித்துடன் இணைத்தாய்-அங்கு சேரும்ஐம் பூதத்தின் வியன் உல கமைத்தாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/76&oldid=921896" இலிருந்து மீள்விக்கப்பட்டது