பக்கம்:வையைத் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனைக் கோடி இன்பம்! 69 பகலும் அமர்ந்து புதுப்புது உண்மைகளைக் காண முயல்வதை இன்பமெனக் கொள்வர். இப்படி எத்தனையோ வகையில் மக்கள் இன்பம் சிறக்கிறது. ஓரறிவு உயிராகிய மரம் தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரை அனைத்தும் அனைவரும் இன்பத்தையே காடக் காண்கின்ருேம். அந்த இன்பம் எத்தகையது என்ற நிலையிலேதான் வேறுபாடு உள்ளது. உலகில் எத்தனையோ கோடி இன்பம் உண்டு: அது போன்றே துன்பமும் எல்லையற்றது வாழ்வில் இன்பமும் துன்பமும் இணைந்தே நிகழ்வன. அவற்றை க்ேகமுடியாது. உயிர்களின் தன்மை, இன்பத்தை நாடு வதும் துன்பத்தை வெறுப்பதுமாகிய நிலையில் உள் விளது. எனினும், அவ்வுயிர்கள் நினைப்பது போன்ருே வேண்டுவது போன்ருே அவற்றுக்கு எப்போதும் இன்பமே வருவதில்லை. துன்பத்தையும் இன்பமெனக் காணும் ஆண்டவன் அடியார்கள் வேண்டுமாயின், "இன்பமே எங்காளும் துன்பமில்லை என்று பாடலாம். அவர்கள் தங்களை மறந்தவர்கள். ஆல்ை, அது சிறந்த கிலேதான். எனினும், அந்த கிலே அனைவராலும் எட்ட முடியாத ஒன்று அல்லவா! உலகில் வாழும் மனிதன் பிற உயிர்களோடு இன்ப துன்ப எல்லையில் கின்று அவற்றுள்ளே பட்டுத்தேற வேண்டியவனேயாவன். அவ்வாறு பட்டுழலும் போது மனிதன் தன் கல்லறிவு கொண்டு துன்பத்தையும் இன்பமாகக் காண முயல் வான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என வள்ளுவர் அதற்கு உபாயம் கூறுகின்ருர். என்ருலும், இவ்வுல கில் இன்பமும் துன்பமும் இணை பிரியாது வாழ்வனவே என்ற உண்மையையும் இரண்டையும் ஏற்றே வாழ வேண்டிய நிலையையும் பக்குடுக்கை நன் கணியார் என்ற சங்கப்புலவர் எடுத்துக் காட்டி, அதன் காரணத் தைப் படைத்தோன்மேல் ஏற்றிப் பேசுகின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/75&oldid=921893" இலிருந்து மீள்விக்கப்பட்டது