பக்கம்:வையைத் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窃8 வையைத் தமிழ் நமக்கே உரிமையானதென்பதையும் நாம் உணர்க் தோம்! எனவே, இன்று எங்கும் அவர் பாடல்கள் கேட்கப் பெறுகின்றன. என்ருலும், அவரது உரிமை வேட்கைப் பாடல்கள் இன்றைய உரிமை காட்டுக்கு வேண்டாத பாடல்களாக ஏட்டில் இருத்தற்குரியன வாக அமைந்து விட்டன. ஆல்ை, அவர் பாடிய பிற பாடல்கள மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுச் சிறக்கின்றன. கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், இயற்கைப் பாடல்கள், இன்ன பிற பாடல்கள் பாரதியாரை வாழ வைக்கின்றன. அவரது புகழ் தமிழ் நாட்டு எல்லேக்கு அப்பாலும் பரவி, பைங் தமிழை வளர்க்கின்றது. அத்தகைய தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுப் பணியாற்றும் உங்கள் பம்பாய்த் தமிழ்ச் சங்கம் ஆற்றும் பாரதி விழாவில் பங்கு கொள்ள யான் உங்கள் முன்னிற்கின்றேன். அவர் பாடிய பாடல்களின் துணைகொண்டே அவரது விழாவைச் சிறப்புற நடத்த வாய்ப்பு உண்டு. எனவே, அவர் பாடல்கள் பற்றியே நம் வாழ்வை வகுக்கும். வழிகளை ஒன்றன்பின் ஒன்ருகக் காண்போம். எத்தனை கோடி இன்பம்' என்பது எனது இன்றைய பேச்சின் தலைப்பு. இன்பம் என்பது யாது? உயிர்களின் உணர்வு கிலேயிலே நின்று காணப் பெறும் ஒரு வகை நெகிழ்வே இன்பமாகும். பெரும் பொருள் சேர்த்து உப்பரிகையிலே வாழ்வதைச் சிலர் இன்பமாகக் கருதுவர். சிலர் என்றும் வேடிக்கைப் பொழுது போக்கையே இன்பமெனக் கொள்வர். சிலர் கதைகள் படிப்பதை இன்பமாகக் கொள்வர். சிலர் காரிகையார் கூட்டுறவே இன்பமெனக் கொள் வர். சிலர் ஊர் சுற்றுவதையும், சிலர் உறங்குவதை, யும், சிலர் நண்பரோடு உரையாடுவதையும் இன்ப மெனக் கொள்வர். சிலர் ஆய்வுக் களத்தில் அல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/74&oldid=921891" இலிருந்து மீள்விக்கப்பட்டது