பக்கம்:வையைத் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை கோடி இன்பம்! - 79. அடியவர் நிலையை-அவ்வடியவர்க்கருளும் கண்ணன் மேல் ஏற்றிக் கூறுகின்ருர் பாரதியார். இன்பத்தை இனிதெனவும்-துன்பம் இனிதில்லை என்றுமவன் எண்ணுவதில்லை அன்பு மிகவுடையாள்-தெளிந்து அறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே "(கண், 3:6) இதில் கண்ணகுைம் இறைவன் கிலே காட்டி, அவனைப் "போற்றும் அறிவறிந்த மக்கள் குலம் அவனேப் போன்று அனைத்தையும் ஒத்து கோக்கி அன்பில் வாழ வேண்டும் என அவர் காட்டும் முறை சிறந்ததன்ருே! இந்த உயரிய நிலையை-அனைத்தினும் இன்பம் காணும் நிலையை-மனிதன் தன் உள்ளத்திண்மையால் பெற முடியும். அதற்குச் சில உபாயங்களேயும் கைக் கொள்ளலாம். பகை, நட்பு என்ற வேறுபாட்டு உணர்வு இன்றி அனைவரையும் அன்பால் ஒத்து நோக்குவதே அவ்வுபாயம். ஆனால், அது எளிதில் கை கூடுவதன்று. எனவே, அனைத்தையும் ஆண்டவனகஅருளன்னேயாக-காண வேண்டுகிருர். கொடிய பகையின் நடுவிலும் பரமன் வாழ்கின்ருன் என்ற உண்மையை உணர்த்துகின்ருர்.

  • தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையில் கும் இடுவாய்; அன்னை பராசக்தி அவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய். ’ என்று காட்டுகின்ருர். மேலும், தம் நெஞ்சை விளித்து, புகைநடுவினில் தீயிருப்பதைப் பூமியில் கண்டோமே, பக்ைநடுவினில் அன்புருவானகம் பரமன் வாழ்கின்றன். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/85&oldid=921915" இலிருந்து மீள்விக்கப்பட்டது