பக்கம்:வையைத் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 வையைத் தமிழ் என்று காட்டி பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!” என்று அன்பால் உபதேசம் செய்கின்ருர். எனினும், இத்துணேப் பெருநிலை பெறுதல் உயிர்களுக்கு எளிதன்றே! எல்லாம் வல்ல இறைவனது அருட்சத்தி தான் இந்த நிலையை உயிர்களுக்கு அருள வேண்டும் என்ற உணர்வு பிறக்கின்றது. எனவே, அருட் சத்தியை நினைத்து முன்னிறுத்தி வரம் வேண்டு கின்ருர். அந்த வரத்தால் தாம் கவலையற்று, எத்தனை கோடி இன்பம் உண்டோ அத்தனையும் பெற்றுக் தெளிந்தவராக வழிகாட்ட வேண்டுகின்ருர். இதோ அவர் வாக்கு: 'கின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய், -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்- இன்றும் மூளா தழித்திடுதல் வேண்டும்;-இனி என்னைப் புதியஉயி ராக்கி-எனக்கு ஏதும் கவலையறச் செய்து-மதி தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! (யோகசத்தி. 137), இனி, இவ்விடையரு உண்மை நிலையைப் பாரதி யார் கதைவழி வரும் பாத்திரங்கள் மூலம் விளக்கும். நிலையும் நோக்கற்பாலதாகும். இவருடைய கதைக் கவிதைகளில் பாஞ்சாலி சபதம் மிகச் சிறந்தது. அதில் திருதராட்டிரன், தருமன் ஆகியோர் கூற்ருக இந்த இறவாத இன்ப உண்மையை விளக்குகின்ருர் பார்க்கு. மிடமெங்கும் இன்ப கிலேயே அன்றித் துன்பத்தை, எண்ணுத ஒன்றே வாழ்வின் முறை என்பதை, தோன்றி அழிவது வாழ்க்கைதான்;-இங்குத் துன்பத்தோடு இன்பம் வெறுமையாம்;-இவை மூன்றில் எதுவரு மாயினும், -களி மூழ்கி நடத்தல் முறைகண்டீர்' (பாஞ், 395), என்று தருமன் வாக்கால் விளக்குகின்ருர், இதில் மற். ருெரு நல்ல புதிய கருத்தையும் விளக்குகின்ருர். இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/86&oldid=921917" இலிருந்து மீள்விக்கப்பட்டது