பக்கம்:வையைத் தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தண் கோடி இன்பம்! 8የ பம் துன்பம் இரண்டையும் பற்றித்தான் இதுவரை காம் எண்ணி வங்தோம். உலகமும் அவற்றைத்தான் எண்ணிற்று. இங்குப் பாரதியார் இரண்டுக்கும் இடை யில் வெறுமை'யைக் காட்டுகின்ருர். ஆம்! உண்மை தான். சிலருடைய வாழ்வு, இரண்டும்-இன்பம் துன் பம் இரண்டும்-இன்றி வறிதே கழிவதைக் காண்கின் ருேம். இன்பத்தில் ஏமாப்பதும் துன்பத்தில் சோர் வுற்று வீழ்வதும் இன்றிச் சிலர் எதையும் பெருது அமைதியாகச் செல்வதை இன்றும் காம் வாழ்விடைக் க்ாண்கின்ருேம். இந்த இன்பதுன்பமற்ற வெற்று நிலையினைப் பாரதியார் வெறுமை என வேருக்கிக் காட்டி விளக்கும் திறன் மிகச் சிறப்பாகப் போற்றக் கூடியதாகும். இனி, இத்தருமன் கூற்ருக, தவம் செய்வார் தம், கருமம் செய்வார்' என்ற வள்ளுவர் உண்ம்ையைக் காட்டி, அதன் வழிப்பெறும் அளவிலா இன்ப நிலை யைக் குறிக்கின்ருர் பாரதியார். சேற்றில் உழலும் புழுவிற்கும்-புவிச். சல்வம் உடைய அரசர்க்கும்-பிச்சை ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்-உயிர் எத்தனை உண்டவையாவிற்கும்-நித்தம் ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து அவ்வக் கணக்தொறும் நிற்குமால்.’ (396) என்று உயர்ந்த உண்மையைத் தருமன் கூற்றில் காட்டி விலக்குகின்ருர். உலகில் தோன்றிய மனி கன் மட்டுமன்றி, எல்லா உயிர்களுமே, ஒவ்வொரு கணத் திலும் தத்தமக்கு உள்ள கடமை உணர்ந்து தவருது கடக்குமேயானல், நாட்டில் கலிவேது? காசமேது? தீமையேது? செயல்முட்டு ஏது? ஒரறிவுடைய உயிர் தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரை இந்தக் கடமை உணர்ச்சியில் சிறப்பாராயின், மற்றவருக்குத் துன்பம் செய்வது உண்டோ காட்டில் அல்லல் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/87&oldid=921918" இலிருந்து மீள்விக்கப்பட்டது