பக்கம்:வையைத் தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வையைத் தமிழ் உண்டோ? அப்போது "எத்தனே கோடி இன்பம் வைத் தாய்! என எண்ணி எண்ணிப் பாடாது என் செயல் வல்லோம்! - - . இனி இறுதியாக இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்து அத்தகைய அருள் உள்ளத்தால் நலம் பெற்று நன்கு சிறப்பவரே மாண்புடையார் என்ற உண்மையை, நாம் எல்லாம் தீயன் எனக்காணும் திருதராட்டிரன் வாய்வழி நமக்குக் காட்டிப் பாரதியார் நம்மையெல் லாம் வாழ வைக்கின்ருர். அவன் கூற்றில் மனிதன் இன்னின்னவாறு நடந்தால்-இன்னின்ன செயல்களை மேற்கொண்டால்-இன்னின்ன பண்புகள் உடைய வய்ை இருந்தால்-கருவிருந்து புவி பிறந்து வாழும் யாரும் மாண்புடையராய் இன்பமே எங்காளும் துன்ப மில்லை' என்று சிறக்க வாழ்வார்கள் எனக் காட்டு கின்ருர், 'கான் எனும் ஆணவம் தள்ளலும்-இந்த ஞாலத்தைத் தான்எனக் கொள்ளலும்-பர மோன நிலையில் நடத்தலும் -ஒரு மூவகைக் காலம் கடத்தலும்-நடு வான கருமங்கள் செய்தலும்-உயிர் யாவிற்கும் கல்லருள் பெய்தலும்-பிறா ஊனைச் சிதைத்திடும் போதிலும் -தனது உள்ளம் அருளின் நெகுதலும் (381) "ஆயிரங் கால முயற்சியால்-பெற லாவர்.இப்பேறுகள் ஞானியர்-இவை தாயின் வயிற்றிற் பிறத்தன்றே-தமைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல்-இந்த மாயிறு ஞாலம் அவர்தமைத் -தெய்வ # மாண்புடை யார்என்று போற்றுங்காண்.' (382) என்ற பாடல்கள் ஏற்றம் உடையனவன்ருே ஞானி கள் பல ஆயிரமாயிரமாண்டுகள் முயன்று இவ்வாறு உலகை ஒத்து நோக்கும் கல் உணர்வையும் அருளையும் பெற்று, அதல்ை துன்பத்தையும் இன்பம்ாக்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/88&oldid=921919" இலிருந்து மீள்விக்கப்பட்டது