பக்கம்:வையைத் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை கோடி இன்பம்! . . 83 தாமும் மகிழ்ந்து, பிற உயிர்களையும் மகிழ்விப்பார்கள். இப்பெருஞ்சாதனையைச் சாதாரண மக்கள் எளிதாகப் பெறுவார்களேயாயின், அவர்களைத் தெய்வ மாண் புடையார் எனப் போற்றுவதில் தவறு இல்லே என்பது உண்மையன்ருே? - - இத்தகைய மாண்புடையார் பலரைத் தமிழ்நாடு மிகு பழங்காலத்திலிருந்தே பெற்று வந்துள்ளது. தொல்காப்பியர் காலம் தொடங்கி இன்றுவரை இவ் வாறு மாண்பு கலமுற்று மற்றவரையும் தமராகப் பேணும் பண்புடையவராலேயே உலகம் வாழ்கிறது என்கின்ருர் வள்ளுவர். அத்தகைய பண்பாளர் வாழ்ந்து வழி காட்டிய தமிழ் மண்ணில் பிறந்த நாம், கம் நூற்ருண்டில் பாரதியாரென்னும் நல்ல வழி காட் -டும் பண்பாளரையும் பெற்ருேம். அவர்: எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' என்று இறைவனே நோக் கிப் பாடினர். அவர் புகழ்பாடி இப்பம்பாய் நகரில் கலன் கண்டு தமிழ் மக்கள் வாழ்வை மலரச் செய்யும் இப்பம்பாய்த் தமிழ்ச் சங்கம் வாழ்க எனவும் இன்பம் இயைக எனவும் வாழ்த்தி எனது இன்றைய உரையை முடித்துக்கொள்ளுகிறேன். வாழ்க இன்பம்! வளர்க தமிழ் நெறி! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/89&oldid=921921" இலிருந்து மீள்விக்கப்பட்டது