பக்கம்:வையைத் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இறவாத கவிதை உலகில் பிறந்த யாவரும் ஒரு நாள் மறைகின்ற நிலையினைக் காண்கின்ருேம். தோற்றமுண்டேல், மரணமுண்டு, என்ற மொழியும் நாட்டில் நிலவு கின்றது. இப்படிப் பிறந்து இருந்து மறையும் வாழ்க்கைக்குள்ளேயும் சில பொருள்கள் கிலேத்து வாழ்வதையும் காண்கின்ருேம். அப்பொருள்கள் ஒரு வேளை உயிர்ப் பொருள்களோ என எண்ண வேண்டா உயிர் பெற்றவை அவ்வுயிரற்று நிலை கெடுதலே முறை. எனவே, நிலத்து வாழ்வன உயிரற்றவையாய் ஆயினும், உயிருள்ளவை காட்டும் உண்மை விளக்கங்களுக்குமேல் உயர்ந்தனவாய்செம்மை கலம் வாய்ந்து சிறந்தவையாய் மிளிரும் என்பது உறுதி. அவற்றிள் மிகச்சிறந்து சிற்பவை. புலவர் படை க்கும் இலக்கியங்களேயாகும். எந்த மொழியிலேயும் நல்ல புலவர்கள் பாடுகின்ற இலக்கி யங்கள் நெடுங்காலம் நிலைபெற்று வாழ்கின்றன. சிறந்த இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டு, தாம் பிறந்த மண்ணே மறையினும், தாம் மறையாது. சிறக்கவாழும் நிலை, வரலாற்றில் காணும் நெறியாகும். இந்த கிலே தமிழ்க் கவிதைக்கும் பொருந்துவதாகும். கம்மை ஆண்ட ஆங்கிலேயர் நம் காட்டைவிட்டு நீங்கி விட்ட போதிலுங்கூட, அவர்தம் இலக்கியங்கள் நம்மை விட்டு நீங்கவில்லை; இனியும் நீங்கமாட்டா. அது போன்றே, தமிழ் மொழியைப் பற்றி அறியாத காடுகளிலெல்லாம் வள்ளுவர் குறள் மொழி பெயர்க் கப்பெற்றுப் போற்றப் பெறுகின்றது. எனவே, நல்ல இலக்கியங்கள் காடு கடந்தும் காலம் கடந்தும் கிலே பெற்று வாழும் அமர நிலையைப் பெற்றவை. என்பது கண் கூடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/90&oldid=921926" இலிருந்து மீள்விக்கப்பட்டது