பக்கம்:வையைத் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாத கவிதை 85, புலவர்தம் பொய்யா இலக்கியங்களையும் மனிதப் படைப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் புலவர் ஒருவர், மனிதனைப் படைக்கும் பிரமனினும் கவிதையைப் படைக்கும் புலவன் மேலானவன் எனக் காட்டு கின்ருர். எனினும், அந்தப் புலவனுக்கு அருள் புரியும் கலைமகளைத் தன் வாழ்வரசியாகவே கொண்டுள்னான் பிரமன். இதை அந்தப் புலவர், 'கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான்-மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வன் போல் ம்ாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு.’ என அழகுபட எடுத்துக் காட்டுகின்ருர். எனவே, கல்ல புலவர்கள் இறவாத கவிதை பாடி உலகில் என்றென்றும் நிலை பெற்று வாழ்கிருர்கள். மொழி வளம் பெற்ற நாள் தொட்டு எத்தனையோ புலவர் பாட்டிசைத்திருக்கிருர்கள். அவர்கள் இசைத்த அத்தனையும் இன்று இருக்கு மால்ை, அவற்றை நிரப்பி வைக்க காட்டில் உள்ள வீடுகள் போதா. ஆல்ை, அவற்றுள் பெரும்பாலன அந்தத் தொல்லேயை நமக்கு வைக்கவில்லை. கடல் கோளாலும், பிற கொடுமைகளாலும் இயல்பாகவே அழிந்தன போக, எஞ்சியுள்ளவற்றுள் பல, தாமாகவே தம் முடிவைத் தேடிக்கொண்டன என்னலாம். ஒரு சில, தம்மைத் தோற்றுவித்த அந்தப் புலவனது வாழ்நாள் எல்லேயிலேயே அழிந்தொழிய, ஒரு சில காலம் சென்று அழிக்தொழிந்தன. இதற்குக் காரணம் என்ன? அவற்றின் நிலைபேறுடைமை பில்லாத் தாழ்வேயாகும். எல்லாப் பாட்டும் பாட்டாகா. எல்லாப் புலவரும் புலவராக மாட்டார். ஆம்! சிறந்த புலவனே இறவாத கவிதை பாட முடியும். பாடுகின்ற அத்தனைக் கவிதையும் வாழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/91&oldid=921928" இலிருந்து மீள்விக்கப்பட்டது