பக்கம்:வையைத் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வையைத் தமிழ் மாயின், இறவாத கவிதை என்று எதைக் காட்ட முடியும்? - எது இறவாத கவிதை கவிஞன் தன்னே மறந்து நின்று, உள்ளத் தூய்மை உடைவகிை, உலகை நினைத்து, மக்கள் வாழ்வொடு தானும் பிணைந்து அவ், வாழ்வையே தன் கவிதைக்கு நிலைக்களகைக் கொண்டு உணர்வின் உச்சியிலே நின்று பாடுவாயிைன், அவன் கவிதை சிறந்து என்றென்றும் வாழும் இறவாத கவிதையாய் விளங்கும். உண்மைக் கவிதைக்கு உளத் தூய்மை தேவை. நல்ல தூய உள்ளமுடைய புலவன் செய்யும் கவிதை கால வெள்ளத்தைக் கடந்து, தான் வாழ்வதோடன்றி, தவறி விழும் மனிதர்களுக்கும் வழி காட்டியாய் கின்று, உலகையே தன்னுடன் அழைத்துச் செல்லும். இன்று தமிழர் போற்றும் திருக்குறள் அந்த வகையில் சிறந்த நூலாக அமைவதை அறிகி ருேம். இத்தகைய இறவாத கவிதையையும், அதைப் பாடும் புலவனேயும் அதல்ை உலகம் பெறும் பயனேயும் எண்ணி எண்ணிப் பார்க்கிருர் பாரதியார். அவருடைய இறவாத கவிதை உருபெற்று ஓடி வருகிறது. - உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின பள்ளத்தில் வீழ்ந்தருந்த குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுறற தமிழமுதின் சுவைகண்டார் இங்குஅமரர் சிறப்புக் கண்டார். ' என்று காட்டி வையத்திலேயே வானுலக வாழ்வை, மலர்விக்கும் திறன் இறவாத கவிதைக்கு உண்டு என் பதை நன்கு எடுத்துக் காட்டுகின்ருர். கடவுளர்தம், நிலைகெட்டு அழியும்; கடவுள் நெறி காட்டும் தலைவர் தம் புகழ் மாயங்து ஒழியும்; இறவாத கவிதை பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/92&oldid=921930" இலிருந்து மீள்விக்கப்பட்டது