பக்கம்:வையைத் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவர்த கவிதை 87 வதன் மூலம் தாம் என்றென்றும் நிலை பெற்று வாழ முடியும் என எக்களித்தப் பாடுகின்ருர் பாரதியார். ஆனல், அந்த உயர்ந்த நிலைபேறுடைய வாழ்வுக்கு மிக மிக இன்றியமையாதது உள்ளத்தூய்மையே என்ப தையும் அவர் காட்டத் தவறவில்லை. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று வள்ளுவரால் வெறுத் தொதுக்கப்பட்ட கொடுமை உள்ளத்திலிருந்து நீங்க வேண்டுவது முதன் முதலாக இன்றியமையாத ஒன்றன்ருே சினம் நீங்கின், தம்மை ஒறுத்தார் மாட்டும் மாறுபாட்டுக் கருத்து உண்டாகாது. இன்னர் இன்ரியார் என்ற வேறுபாடும் முக்ளக்காது. கோபமே பாவங்களுக்கெலாம் தாய் தந்தை' என வேறு ஒரு புலவரும் சுட்டிக் காட்டுகின்ருர். எனவே, பாரதியார் கொடுமைகளுக்கெல்லாம் முதலாய சினம் நீங்கிய மனத்தோடு கவிதை பாடுகின்ற காரணத்தால், இறவாத கவிதை பாடும் ஏற்றத்தால், என்றென்றும் கடவுள் நெறி காட்டிய பெரியாரைக்காட்டிலும் தாம் கிலேத்து வாழ முடியும் என்ற உண்மையை விளக்கு கின்ருர். இதோ அவரது இறவாத பாட்டு: . "சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான். பலர்புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்; பார்மீதில் யான்சாகா திருப்பேன் கண்டீர்; "மலிவுகண்டீர் இவ்வுண்மை; பொய்கூ றேன்யான் மடிந்தாலும் பொய்கூறேன்; மானு டர்க்கே நலிவுமிலை சாவுமிலகேளிர் கேளிர் - நானத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்பொழுது சாவுமங்கே அழிந்து போகும்; மிச்சத்தை முறசொல்வேன் சிதைதை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரண மில்லை. " என்று அவர் காணம், கவலை, சினம், பொய், அச்சம், வேட்கை இவைகளே மனிதனே விரைந்து சாவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/93&oldid=921932" இலிருந்து மீள்விக்கப்பட்டது