பக்கம்:வையைத் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வையைத் தமிழ் குழிக்கு அழைத்துச் செல்லும் கொடுமை வாய்ந்தன என எடுத்துக் காட்டி. அவற்றுளெல்லாம் முன்கை, மிகக் கொடியதாய் உள்ள கோபத்தைக் கொன்று, அவ்வாறு சினம் அழிந்த உள்ளத்தால் செம்மை கலம் பெற்ருல் சாகாது வாழலாம் என எடுத்துக் காட்டு கின்ருர். - இறவாத கவிதை என்பது வாழ்வொடு பொருங் தியதாய் இருக்க வேண்டும்; மக்கள் என்றென்றும் கிலேத்து வாழும் வகையில் நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தன்மைகளைப் பெற்றவையாக இருக்க வேண்டும்; என்றென்றும் உயிரினத்தின் ஆக்கத்துக்கு வழி காட்டுவனவாக அவை சிறக்க வேண்டும். பாரதியார் பாடல்களைப் பல வகையாகப் பகுத்துள் ளனர். தேசிய கீதங்கள், சத்திப்பாடல், கண்ணன் பாட்டு, சமூகப் பாட்டு, கதைப்பாட்டு எனப் பல வன்கயில் அவர் பாடல்கள் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில, ஒருகால் எங்கும் விரும்பப்படுவன வாகி மற்ருெருகால் கேட்பாரற்று அழிகின்றன. ஒரு சில எக்காலத்தும் விரும்பப்படுவனவாகிச் சிறக்கின் றன. உரிமை வேட்கையிலே ஆங்கில ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த காலத்திலே அவ்வாட்சியை வீழ்த்த வேண்டி அவர் பாடிய பாடல்களெல்லாம் அன்று தெருவுதொறும் மு. முங் கி ன. ஆல்ை, இன்று அவற்றைப் பாடுவோர் யார்? பாட்த் தேவைதான் என்ன? ஆகவே, அவை இறவாத கவிதை ஆகா! அவை தனிப்பட்ட வகையில் வாழும் ஒர் இந்திய இனத்தை மட்டும் விடுதலைப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவின. அத்தகைய தனி வாழ்வைக் காட்டும் பாடல்கள்-அவை தனி மனிதனேப் பற்றியவை யாயினும் சரி, தனி காட்டைப் பற்றியவையாயினும் சரி-இறவாப் பாடல்கள். ஆகமாட்டா அவற்றுள் கவிஞன் தன்னை மறக்கவில்லை-தன் காட்டை மறக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/94&oldid=921934" இலிருந்து மீள்விக்கப்பட்டது