பக்கம்:வையைத் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாத கவிதை 89. வில்லை-தன் அடிமை வாழ்வையும் அல்லலேயும் மறக்கவில்லை. அவை அவனுடைய உள்ளக் குமுறல் உதட்டில் கொண்டு வந்து காட்டும் சொல் ஒவியங் களாய் அமைந்து விட்டன. அவை அந்த வேளையில் கேட்போர் உள்ளங்களைத் தொட்டிருக்கலாம். ஆலுைம், அவை என்றென்றும் வாழும் வளம் பெற்றன எனக் கூற முடியுமா? ஆல்ை, அவற்றிற்கு மாருகக் கவிஞன் தன்னை-தன் வாழ்வை-தன் காட்டை - ஏன்? - தன் உலகையே மறந்து, காடெங்கும் வாழவேண்டும் என்ற நல்ல உணர்வில் பாட்டிசைப்பானேயாயின், அப்பாடல்கள் சாகாவரம் பெற்று வாழும். கம் சங்ககாலப் புலவர்களும் பலர் இத்தகைய பாடல்களைத்தான் பாடியுள்ளனர். இடைக்காலத்திலும் புலவர் சிலர் அவர்தம் அடியொற்றி வாழ்ந்திருக்கின்றனர். பாரதியாரும் அந்த வகையிலே தான் - சாகாவரம் பெற்றவராக வாழும் வகையில் பல நல்ல கவிதைகளை காட்டுக்குத் தந்திருக்கிருர். அவர் பாடலைத் தெருவு தொறும் முழககி விடுதலை பெற்ற இன்றைய அரசாங்கம், அத்தகைய பாடல்களைத் தொகுத்து, சிறந்த முறை யில் வெளியிட்டு, உயிரோவியங்களாகிய அவைகளை உவகுக்குப் பயன்படு முறையில் அளிக்க வேண்டும். அவர்தம் துணை இல்லாமலே அப்பாடல்கள் இறவாத கவிகளாக என்றென்றும் வாழும். எனினும், பாரதியாருக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தாவைது இந்த அரசாங்கம் இந்த வகையில் செயலாற்றிச் சிறந்த பதிப்புக்களைக் கொண்டு வருமாயின், பொன் மலர் காற்றமுடைத்து, என்பது போலச் சிறப்புறும் என நினைக்கின்றேன். இனி, பாரதியார் பாடிய இறவாத கவிதைகள ஒன்றன்பின் ஒன்ருகக் காண்போம்: உலகம் நல்ல வகையில் வாழவேண்டுமாயின், அதில் வாழும் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/95&oldid=921936" இலிருந்து மீள்விக்கப்பட்டது