பக்கம்:வையைத் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வையைத் தமிழ் அனைவரும் வயிறு ஆர உண்டு, பசியும் பிணியும் பகை யுமற்று வாழ வேண்டும். சமதர்மச் சமுதாயம் உதட்டளவில் அன்றி உண்மையில் காட்டில் நன்கு செழிக்க வேண்டும். ஒருவன் வாட, அவ்வாட்டத்தின் பயனை மற்றவன் தன் வாழ்வுக்குப் பயன் படுத்த லாகாது. இந்த உண்மை ஒரு காலத்துக்கு மட்டும் பொருந்து வதன்று. உயிரினம் வாழும் என்றென்றைக் கும் பொருந்தும் உண்மை இது. எல்லோரும் உண்டு. சிறக்க வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து சாகாக் கவிதை செய்த வள்ளுவனர், இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். ' என்று கூறி உலகை உண்டாக்கிய இறைவன் எண்ணம் அனைவரும் நன்கு வாழ வேண்டும் என்பது தான் என்பதையே எடுத்துக் காட்டுகின்ருர். இதை அடிப்படையாகக் கொண்ட பாரதியார், உரிமை காடுகள் சட்டமாக்கி என்றென்றும் காப்பாற்ற: வேண்டிய விதியாகக் கருதி, இனிஒரு விதிசெய்வோம்;-அதை * எந்தகாளும் காப்போம்: தனிஒருவனுக்கு உணவிலைஎனில் சகத்தினை அழித்திடுவோம்! " என்று ஆவேசப் பாட்டாகப் பாடி விட்டார். இனி, இவ்வாறு அனைவரும் இணைந்து வாழும் வாழ்வே சமதர்மச் சமுதாயத்தைக் காட்டி, வேறு. பாடற்ற வகையில் அனைவரையும் ஒன்றிய உணர்வில் வாழவைப்பதாகும். அப்போது மக்கள் அனைவரும் தங்கள் முன் தோன்றும் வேறுபாடுகளே மறந்தவர் களாய, - - .

  • எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர்கிறை எல்லோரும் ஓர்நிலை எல்லாரும் இக்காட்டு மன்னர். (பாரத சமு.):

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/96&oldid=921938" இலிருந்து மீள்விக்கப்பட்டது