பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வைஷ்ணவி சங்கிதிமுறை பும் உனது கருணை விலாசத்துள் அடங்கியிருக்க, எந்தக்காப்பு, யாருடையகாப்பு - உனக்குக் காப்பாகும் என்று கான் உரைக்கவல்லேன் ; (எவ்வுயிரையும் காக்கும் தேவிக்குக்காப்பு இதுதான் என்று கூற முடியாது என்றபடி). (கு) கைக்காப்பு - கைவ8ள. - காப்புப் பருவம் - இன்ன கடவுள் இந்தக் குழந்தையைக் காக்கவேண்டும் என வேண்டுதல் - காப்புப்பருவத்தது. இது 2-அல்லது 3-ஆம் மாதத்திற் கூறப்படும். 82. செங்கீரைப் பருவம் இங்கீரம் இல்லாத நெஞ்சம் படைத்த எளியனுக்குச் சங்கீத ஞானம் இலையுனைப் பாடிச் சதா துதிக்க அங்கீரம் அன்ன அமுத மொழியளே ! ஆரணங்கே ! செங்கீரை யாடி அருளென வேண்டுவன் சிற்பரையே ! உ) பால் போல இனிய மொழிகளையுடைய தேவியே! ஈரம் (கருணை) இல்லாத கெஞ்சினகிைய எனக்குச் சங்கீத ஞானம் இல்லை - உன்னைப்பாடி எப் போதும் துதிப்பதற்கு ; ஆதலால் இசையுடன் பாடி வேண்டாது சாதாரனப் பேச்சுமுறையில்) தேவி ரீ செங்கீரையாடியருள் என வேண்டுவேன். (கு) ஈரம் - கருணை. அங்கீரம் - அம் - அழகிய. கீரம் - பால். 2. செங்கீரை ஆடுதல் : கீர் - சொல் : குழந்தை மொழிபயிலத் தொடங்கும் பருவம். ஒருகாலை முடக்கி, ஒருகாலை நீட்டி, இரு கரங்களையும் கிலத்தில் ஊன்றித் துலைகிமிர்த்தி முகத்தை அசைத்து ஆடுதல் செங்கீரை யாடுதல். இது 5-ஆம் மாதத்திற் கூறப்படும்.