பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 89 யானையை) அடக்குதற்கு வேண்டி நீ (அங்குசம்) தோட்டி என்னும் ஆயுதத்தை ஏந்தி உள்ளாய் ! அந்த ஆணவம் என்னும் மதயானையைக் கட்டி கிறுத்தவே பாசக்கயிற்றையும் ஏந்தியுள்ளாய் ; இந்த உண்மை தெரிந்தே உன்னை நான் ாகித்தம் துதித்து வணங்கு கின்றேன். (கு) இலக்குமியும் சரஸ்வதியும் தேவியின் கண் கள்-(தேவி அனுபூதி - பாடல் 15-ன் குறிப்புரையைப் பார்க்க) செந்தாமரையில் இலக்குமியும், வெண்டாமரையில் சரஸ்வதியும் வீற்றிருப்பர் பூ - தாமரை. பூவெனப் படுவது பொறிவாழ் பூவே'-கால்வர் கான்மணி மாலை40. பொறி - இலக்குமி. ஆணவம் மதயானைக்கு ஒப்பிடப்பட்டது. அந்த யானையை அடக்க அங்குச மும், பிணித்தற்கு (கட்டுதற்கு) ஒரு பாசமும் வேண்டும். "ஆணவ வெங்கரி பிணித் தடக்கி’-தணிகைப் புராணம், கடவுள் வாழ்த்து 3. பிள்ளைத்தமிழ்ப்பகுதி (81-90) 81. காப்புப் பருவம் சந்தனக்கோப்பினன் மேனி அழகும், தளிரனய அந்தகைக் காப்பின் அழகும் பொலிகின்ற அம்மணியே ! உந்துங் கருணையில் எவ்வுயிர்க் காப்பும் உனதெனில் நான் எந்தநற் காப்பினைக் காப்புனக் கென்பேன் எழிலுமையே! (உ) சந்தனக் காப்பணிந்த மேனி அழகும், திருக் கரத்தில் அணியப்பட்டுள்ள ப்ொற்காப்பின் அழகும் பொலிந்து விளங்கும் தேவி எல்லா உயிர்களின் காப்