பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92 வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) 4. சப்பாணி கொட்டுதல் : சப்பாணி கொட்டும் படி குழந்தையை வேண்டுதல். கையோடு கையைச் சேர்த்துத் தட்டுதல். சப்தம் பாணி - சப்தம் உண் டாகும்படி தட்டுதல். இது 9-ஆம் மாதத்திற் கூறப் படும். 85. முத்தப் பருவம் கடல்முத்தும் வேண்டேன் கழைமுத்தும் வேண்டேன் கரிதருமல் வடல்முத்தும் வேண்டேன், மலைமுத்தும் வேண்டேன் அரவுமிழும் திடமுத்தும் வேண்டேன் பரசிவை யே நான் தினம்திருத்தி படமுத்தம் தேரல் ஒன்றையே வேண்டுவன் பாரினிலே. (உ) பரசிவையே எனக்குக் கடலில் உண்டாகும் முத்தும் வேண்டாம் : மூங்கிலில் உண்டாகும் முத் தும் வேண்டாம் ; யானை மத்தகத்தில் உண்டாகும் முத்தும் வேண்டாம் ; மலையிற் கிடக்கும் முத்தும் வேண்டாம் ; பாம்பு உமிழும் முத்தும் வேண்டாம் : கான் கித்தம் திருப்திப்படும்படி உன் வாய்முத்தம் ஒன்றையே விரும்புவன் இவ்வுலகிடையே. (கு) முத்து பிறக்கும் இடம் இருபது என்பர் : ' தந்தி வராக மருப்பிப்பி பூகம் தழைகதலி, கந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினமின்னர், கந்தரம் சாலி கழை கன்னல் ஆவின்பல் கட்செவிகார், இந்து உடும்பு கராமுத்தம் ஈனும் இருபதுமே ' ரத்தினச் சுருக்கம். அடல் முத்து - வலிமை வாய்ந்த முத்து. தி முத்து - திடமுள்ள முத்து. திருத்திபட திருப்தி அடையும்படி. -