பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 93. !! மாலை'-எனத்தொடங்கும் திருப்புகழ் (764)ப் பாடலையும் பார்க்க. 5 - முத்தப் பருவம் : தாயும் பிறரும் “முத்தம் தா" எனக் குழந்தையை வேண்டுதல். இது 11 - ஆம் மாதத்திற் கூறப்படும். 86. வருகைப் பருவம் தேவி வருக, விமலை வருக, திரிபுரையென் ஆவி வருக, அமலை வருக, அடியருளம் மேவி வருக, கிமலை வருக, விரைவுடன் நீ தாவி வருக, தமியேன் அழைக்கில் தயாபரையே. (உ) இச்செய்யுளின் பொருள் வெளிப்படை. (கு) திரிபுரை - செய்யுள்கள் 30, 52 பாடல்களின் குறிப்புரைகளைப் பார்க்க. 6 - வருகைப் பருவம் தளர்கடையிட்டுவரும் குழர் தையை வா - என அழைப்பது இப்பருவம். இது 12 - ஆம் மாதத்திற் கூறப்படும். 87. அம்புலிப் பருவம் தேடி அலைவர் இவள்தனைக் காண அத் தேவரெலாம் பாடி வணங்குவர் பாவலர் நாவலர், உன்னுடனே ஆடி மகிழ அழைக்கின் றனளிவள் அம்புலியே! ஓடி வருக விளையாட இந்த உமையுடனே. •. (உ) ஏ ! அம்புலியே (நிலவே) இத்தேவியின் காட்சியைப் பெறவேண்டியே தேவரெல்லாம் தேடி அ2லகின்ருர்கள் : சிறந்த பாவலர்களும் காவலர்களும் இவளைப் பாடிப்பேசி வணங்குகின்ருர்கள். (இத்தகைய பெருமை வாய்ந்த தேவி) உன்னுடன் ஆடி மகிழ