பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வைஷ்ணவி சந்நிதிமுறை வெல்வேன்! உன் திருவடியைத் துதித்து உருகும் படியான மனத்தைத் தந்தருளுக ! - (கு) ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, காற்றம். வம்பு - வாசனை. 10. கண் பார்த்தருள ஆரு தரங்களின் மீதே விளங்கும் அமுது பெரும் பேருக வேவரம் வேண்டுவன் இங்கென்றன் பீழை எல்லாம் வேருக, என்றன் பிறவிக் கிடமாம் வினைகளெல்லாம் நீருக, நீ எனக் கண்பார்த் தருளுதி நின்மலையே. (உ) ஆறு ஆதாரங்களின் மீது விளங்கும் அமுதே என் துக்கம் எல்லாம் நீங்கவும், பிறவிக்கு இடமான வினைகள் துாள்படவும் கண்பார்த்தருளுகஎன்னும் வரத்தை வேண்டுகின்றேன். (கு) ஆறு ஆதாரம் - அவை மூலாதாரம், சுவாதிட் டானம், மணிபூரகம், அணுகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன.-தேவி அலங்காரம் 44-பார்க்க. (இரண்டாம் பத்து உரையாதிய முற்றும்)