பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைஷ்ணவி சங்கிதிமுறை நூல் 1. பாடும் பணியைப் பெற ஆடும் மயில்கேர் அழகார் உமையே! தேடும் பொருளைத் தெளிவிப் பவளே ! சூடும் மலர்சேர் சுடர்ப்பா தமதைப் பாடும் பணியே பணியா அருள்வாய். (உ) ஆடுகின்ற மயிலுக்கு ஒப்பான அழகு வாய்ந்த உமாதேவியே! பொருள் விளங்காது மயங்கித் தேடும்பொழுது அம் மயக்கத்தைத் தீர்த்துத் தெளி, வைத் தருகின்றவளே ! அடியார்கள் சூட்டிய மலர்கள் உள்ள உனது ஒளிவீசும் திருவடியைப் பாடுகின்ற பணியையே எனக்குப் பணியாக அருள் புரிவாயாக! (கு) ஈற்றடி கந்தரநுபூதி பாடல் (1 -ஐத் தழுவு கின்றது. 2. கதிபெற பொல்லா வினையேன் புகலேது மிலேன் இல்லா சையெனும் இழிவென் னிடமே கல்லா யுளதே கதியே துரையாய் உல்லாச உளம் கொளும்.உத் தமியே. (உ) உல்லாசமான உள்ளத்தைக் கொண்ட உத்தமியே! நான் பொல்லேன், கதியற்றவன், சம்சார பக்த ஆசை என்கின்ற இழிவான, ஒரு பாரமான கல் என்னை அழுத்துகின்றது. எனக்கு கற்கதி கிடைக் குமா ? சொல்லி அருளுக. (கு) இல் ஆசை - சம்சார பந்த ஆசை.