பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி *) 14. மனம் ஒளிபெற, நிலைபெற சுருள் சேர் குழலாய் ! உனயே தொழுவேன் இருள்சேர் எனதுள் ளொளி ஏற் றிலக, உருள் சேர் மனமோர் நிலைபெற் றிலக, அருள்சேர் மொழியொன் றருளாய் அருளாய். (உ) சுரிகுழல் கொண்ட தேவியே ! உன் இனத் தொழுகின்றேன் ; அஞ்ஞானம் கொண்ட என் உள்ளம் ஞான ஒளி பெறவும், நிலையிலாது திரியும் என் மனம் நிலை பெறவும், நீ உனது அருள் மொழி ஒன்றை அருளுக, அருளுக. (கு) மனம் நிலையற்றது ; ஒருகால் திரிகையில் ஆயிரக் கோடி சுற்ருேடும் திருத்து உளமே'-கந்தரக் தாதி, 34. 'குலாலன் திகிரி வருமொரு செலவினில் எழுபது செலவு வருமன பவுரி கொ டலமரு திருகன்.” -திருப்புகழ், 1009. 15. அருள் பெற காட்சிக் கெளியாய் ! கருணைக்கடல் ! கா மாட்சிப் பெயராய் ! உணவுண் வகையில் சாட்சிக்கு மிடம் தரகான் இசையேன் ஆட்சிக் குரியாய் ! எனை ஆளுவையோ ! (உ) அன்பர்கள் காணுதற்கு எளியவளே! கருணைக் கடலே காமாட்சி கான் உண்ணும்போது சாட்சியாய்க் கூட ஒருவரை உடன் வைத்துக்கொண்டு உண்ணேன் (அத்தனை லோபி கான்). உயிர்களே ஆண்டருளுதற்கு உரியவளே ! நீ தான் என்னை ஆண்டருள வேண்டும்.