பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வைஷ்ணவி சங்கிதிமுறை 'பக்கம் எனக்கு ஆசை ; இந்த இரண்டு ஆட்சியால் நான் மெலிந்து துயர் உறுகின்றேன். மீனட்சித் தாயே! நீயே சரண்' என்று கான் தேவியை வேண் டினல் தேவி எனக்கு விண்ணுல்க ஆட்சிசெய்யும் பேற்றை(யும்) தருவாள். (கு) கான் ஆட்சி - யான் - எனது' என்னும் ஆணவ (அகங்கார - மமகார) ஆட்சி. 13. காளமேகனை ஆண்டது மதுதந்த மலர்க்குழ லாய் ! மறைசேர் பதுமங் திகழ்வாய் உனதம் பலமாம் அதுதங் தொருவற் கருள் செய் தனை நீ எதுதங் தெனை நீ இனிதா ளுவையோ. (உ) தேவி! வேத தாமரையில் வீற்றிருப்பவளே ! உனது எச்சில் தாம்பூலத்தைத் தந்து ஒருவனுக்கு (காளமேகனுக்கு) அருள்புரிந்தாய் ! எனக்கு எதைத் தந்து அருள்புரிவாய் கூறி அருளுக. (கு) மது - தேன். மறைசேர்பதுமம் - வேத தாமரை. எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே!' - அபிராமி அக்தாதி, 10. தம்பலம் - தாம்பூல எச்சில். ஒருவன்-காளமேகன். காளமேகப் புலவர் திருஆனைக்கா கோயில் மண்டபத்தில் உறங்குகையில் தேவி அகிலாண்டேசுரி தேவதாசியின் உருவில் அவர் முன் தோன்றி அவரை வாயைத் திற' என்ருள்: அவர் வாயைத் திறக்கத் தேவி தன் தாம்பூல எச்சிலை அவர் வாயில் உமிழ்ந்து மறைந்தனள். அது முதல் அவர் ஆசுகவி பாடும் மகாகவி யாயினர். தேவி அலங்காரம்பாடல்-65 பார்க்க. -- مقايي o