பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 15 தங்கையே : பாம்பு, மேகம், நிலவு, இவைகளைச் சூடி யுள்ள சிவபிராற்கு உரியவளே ! உனது திருவடிக் கீழ் ஒரு தலைமறைவான இடத்தைத் தந்து உதவிபுரியாயோ! (கு) மராமேழ் கடிந்தோன் - திருமாலாம் ரீராம பிரான்: அரா - பாம்பு: சிவபிரான் சடையில் மேகமும் உண்டு. 'மழைபுல்குவார்சடை, 'வான மருஞ் சடை - சம்பந்தர், 3-90-3: 3-63-4. “தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலை மறைவே” - அப்பர் 4-113-2. 24. பொய்யரைத் தண்டிப்பவள் ஓம் பாடும் உளம் திகழ் உத்தமர்கள் தாம்பாடி வணங்கு முத் தாம்பிகையே ! ஒம்பாது பொய்சொன்ன ஒருத்தனை முன் பாம்பாக வெருட்டிய பார்ப்பதியே! (உ) ஒம் என்னும் பிரணவ மந்திரத்தைத் தியானிக் கும் உத்தமர்கள் பாடி வணங்கும் முத்தாம்பிகையே! பின்வருவதை ஆராயாது பொய் சொன்ன ஒருவனைப் பாம்பாகச் சென்று வெருட்டினவளே ! (கு) ஒம்பாது - பின்வருவதைச் சீர்தூக்கி ஆரா யாது; முத்தாம்பிகை -திருஆமாத்துார்த் தேவி பெயர். திரு ஆமாத்தூரில் வழக்கொன்றில், ஒருவன் மூங் கில்தடியின் உட்புறத்தில் பனங்காசுகளை மறைத்துத் தேவியின் சக்கிதிமுன் கின்று என் கையில் உள்ள இந்த மூங்கில் தடி தவிர வேறு பொருள் என்னிடம் இல்லை என்று பொய் சொல்லி, இந்த முத்தாம்பிகை என்னைக் கொத்திக் கொல்வாளோ என்று சொன்ன ம்ை. அவன் வெளியே வந்ததும் தேவி அவனைப்