பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 27. 42. ஆண்டருள உமைநீ உரை செய் உரைதான் மறையின் அமையும் ஒலியென் றறைவார் பெரியோர் இமயம் வளர்பெண் எழிலே! குயிலே! எமையாண் டருளும் ஒருநாள் எதுவோ. (உ) இமய மலையில் வளர்ந்த அழகீ ! நீ பேசுவ தெல்லாம் மறை (வேத) ஒலியாகும்-என்று பெரியோர் கூறுகின்றனர். நீ என்னை ஆண்டருளும் ஒரு காள் வருமோ ! (வரவேண்டுகின்றேன் என்றபடி) . (கு) வேதமே பேச்சாகக் கொண்டவள் தேவி. வேதஞ் சொல் பேதை - திருப்புகழ், 93. 'உமைஉரை செயுமவை மறையொலியே”-சம்பந்தர், 3-98-3. முது மறையின் பேச்சி - திருப்புகழ், 1133. 43. தேவி பாட இறைவன் ஆடுதல் அரைசேர் அரவுன் அவன் ஆடுவல்ை பரைநீ இசைகள் அவை பாடிடவே தரையில் இதுகற் றலமென் றெவரும் உரைசெய் திருமுல் லைவனத் துமையே! (உ) பூவுலகில் இது கல்ல ஸ்தலம் என்று யாவரும் பாராட்டும் திருமுல்லைவாயில் என்னும் தலத்தில் அமர்ந்துள்ள தேவியே! நீ இசைகள் பாடப் பாம்பை அரையில் அணிந்துள்ள சிவபிரான் ஆடுவர். (கு) பரை - பார்வதி. தேவிபாடச் சிவபிரான் கடம் ஆடுவர். ' கீதம் உமைபாட...வேத முதல்வன் கின்ருடும் -சம்பந்தர் 1-46-7. ' பாடும் கவுரி பவுரி கொண்டாடப் பசுபதி கின்ருடும்-கந்தர் அலங். 68