பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வைஷ்ணவி சங்கிதிமுறை " தவளத்த நீறணியும் தடந்தோள் அண்ணல் தன்னுெருபால் அவள் அத்தனம் மகனும் தில்லையான் '-திருக் கோவையார்-112, சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்ற லின் தேவிக்குச் சிவபிரான் அத்தன் (தந்தை) ஆவார் : சத்தி தத்துவத்தினின்றும் சதா சி வ தத்துவம் தோன்றலின் தேவிக்குச் சிவபிரான் மகன் ஆவார். சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் -சிவஞான சித்தியார், சுபக்கம்-167, 'கனகமார் கவின் செய் மன்றில் அனக நாடகற்கெம் அன்னை மனைவி தாய் தங்கை மகள்.' (சிதம்பரச் செய்யுட் கோவை, 33) 41. தேவி அழிவில்லாதவள் யாழின் மொழியாள் இமவான் மகளார் ஏழின் இசையாள் எனையாளுடையாள் ஊழின் கடைகாள் உலவா வருவாள் சூழின் இவளே தொலைவில் லவளே. (உ) யாழ் போன்ற இனிய மொழியாள், இமய ராஜன் மகள், ஏழிசை வல்லவள், என்னை ஆள் உடையவள், கடையூழி காலத்திலும் அழியாது உலவு கின்றவள் இவள்தான், ஆய்ந்து பார்க்கின், அழிவில் லாதவள் (என் உணர்வோமாக.) (கு) யாழைப் பழித்தன்ன மொழி மங்கை "சுந்தரர். திருமறைக்காடு-1. ட் தொலைவு இல்லவள் . தொலைவு -அழிவு: ஊழ்-உலக முடிவு."