பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 25 39. என் மனப்பாழ் அறை தேவியின் பள்ளி அறை ஆகுக மதுவார் பொழில் முல் லைவனத் துமையே! இதுகேள், எனதிம் மனப்பாழ் அறையைப் புதுவி நிறைகின் பொலன்பள்ளியறை அதுவே என ஆக் கிடுரீ அரசீ ! (உ) தேன்நிறை மலர்ப்பொழில் சூழும் முல்லை வனத்துத் தேவியே! நான் சொல்வதைக் கேட்டருளுக. என்னுடைய இந்த மனம்'என்னும் பாழான அறையை நீ உனது புதுமலர்ப் பொன்மயப் பள் ளியறையாக ஆக்கி அமர்ந்தருளுக. (கு) மது - தேன் , வீ-மலர்; பொலன் - பொன். ' என் சிந்தைப் பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கி'- கழுமல மும்மணிக்கோவை(பட்டினத்தார்)-4. 40. சிவபிரான் தேவியின் மகன், தந்தை எப்படி ? பொன்னேர் சடையன் புனிதன் இறைவன் என்னேயிது ! கின் மகன் அத்தனெனத் தன்னேர் மணி வாசகர் சாற்றுகின்ருர் அன்னே!அதன் மெய்ப்பொருள் யாதுரையாய். (உ) தேவி! ப்ொன்னிறச் சடையை உடைய சிவ பெருமான் உனக்கு மகன் எனவும், தகப்பன் எனவும், தனக்குத்தானே இணையான மணிவாசகர் சொல் கின்ருரே. இது என்ன ஆச்சரியம் ! தாயே! இதன் மெய்ப் பொருள்தான் யாது ! உரைத்தருளுக.

(கு) இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்எம் ஐயன்-திருவாசகம்,9-13.