பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 29. யின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட சமயத்தி லும் தேவி ! நீ மிகப் பயந்தாயே! ஏன் பயந்தாய் ! காரணத்தைக் கூறியருளுக. (கு) பிரானர் விஷத்தை உண்டபோது அது அவரைக் கொல்லும் எனவும், யானையின் ஈரத் தோலைப் போர்த்துக் கொண்டால் அவர் இறந்து படுவர் என்றும் தேவி அஞ்சினள் என்ப; யானையின் ஈரத்தோல் கொல்லும் தன்மையதாதலின், வாரணத் தின் ஈருரிபோற் கோள் இமிழ்ப்பு."-(சிந்தாமணி 2787) யானையின் பசுந்தோல் பிறர் உடம்பில் பட்டால் கொல்லுமென் றுணர்க. வாரணத்துரி தப்பாமற். கொல்லும் -சிந்தாமணி, 2787 உரை) 46. தேவி என்னுள் இருக்க உன்றன் நடுவுன் கணவன் உளன்ரீ என்றும் அவன்தன் கடுவுள் இருத்தி இன்றிங் கிருவி ரெனது ஸ்ளிருக்க என்றும் விழைவேன் கொடிகேர் இடையாய் ! (உ) கொடியிடைத் தேவீ ! உனது கடுவில் உன் கணவன் (சிவபிரான்) உளன் : அவனுடைய கடுவில் நீ இருக்கின்ருய்; நீங்கள் இருவரும் என்னுள் இருக்க, நான் என்றும் ஆசைப்படுகின்றேன். (கு) உடையாள் உன்றன் நடுவிருக்கும், உடை யாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதால்ை.... அருளைப்புரியாய்" - திருவாசகம், 21.1. கொடி கேர் இடை-நேர்-போன்ற, கொடியிடை நாயகி வடதிருமுல்லை வாயில் தேவியின் திருநாமம். விழைவேன்-விரும்புவேன்.