பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வைஷ்ணவி சங்கிதிமுறை குயிலே! மரகதமே பாண்டிநாட்டை ஆண்டருளிய சிரோமணியாம் மீனுட்சியே என்றெல்லாம் உஇனப் புகழ்ந்து கூற நான் என்ன மகாதவம் செய்தேனே இப் பூமியிலே. _(கு) உன்னற்கு-உன்னுதலுக்கு-நினைத்தற்கு மன் கற்கொடி-மன்-நிலைபெற்ற. தென்னன்-பாண்டியன். என்னற்கு-என்று கூறிப் புகழ்வதற்கு. 15. பிணிகள் விலக மணியே மணியின் ஒளியே ! ஒளியுள் வளருருவே ! பிணியே அறியா வரமருள் வாய், சிவன் பேனரவாம் அணியே அணியாக் கொள் அம்பிகையே ! அந்தம் ஆதியில்லாய் ! மணியேய் அழகெறி கண்டன் மகிழும் வயிணவியே! (உ) சிவன் விரும்பி அணியும் பாம்பையே ஆப ரணமாகக் கொண்ட அம்பிகையே! அக்தம் ஆதியில் லாதவளே ! நீலகண்டராம் சிவபிரான் மகிழும் வைணவித் தேவியே மணியே மணியின் ஒளியே ! ஒளியுள் விளங்கும் உருவே நோய் என்பதே வராத வரத்தை எனக்குத் தந்தருளுக. (கு) பேண்-விரும்பும். ஏய்-போன்ற. 16. ஆண்டருளுக மகிடா சுரனை முன் மர்த்தித்த மாதங்கி மாலினியே ! நெகிழா. உளத்தவர் நெஞ்சில் நிலைபெரு நீதியளே ! அகியா பரணத் தகிலாண்ட நாயகீ! ஆண்டருள்வாய் முகிலார் பொழிற்றிரு முல்லை வனமமர் மொய்குழலே! (உ) மகிஷாசுரனைச் சங்கரித்த தேவியே! 'கசியாத உள்ளத்தவர்களின் நெஞ்சிலே கி2லபெற்றிராத நீதி