பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வைஷ்ணவி சங்கிதிமுறை 22. உனை நினையாப் பேதையர் ஏன் பிறந்தார் ? நூற்கே இணையிடைப் பாவாய் ! உனகினை நோன்பதனை ஏற்காத பேதையர் ஏன் பிறந் தாரிவ் விருகிலத்தில் வேற்கா டருகுறு முல்லைத் தலத்துக்கு மேல் வடக்கில் நாற்காத தூரத் தணியர சைப்பெற்ற நாரணியே! (உ) திருவேற்காடு என்னும் ஸ்தலத்துக்கு அருகில் உள்ள திருமுல்லை வாயிலுக்கு வடமேற்கு காற்பது மைல் தூரத்தில் உள்ள திருத்தணிகைப் பெருமானம் முருகவே8ளப் பெற்ற தேவியே நூல்போன்ற மெல்லிய இடையை உடையவளே ! உன்னை கினைந்து போற்ருத பேதையர்கள் ஏன் இவ்வுலகிற் பிறந்துள் ளார்கள் ? (கு) நூற்கே - நூலுக்கே. காற்காத துாரம்-காலு காத துாரம்; 40 மைல். தணி யரசு-தணிகை முருகர். 23. உனைப் பூசியாத யான் உய்தல் எவ்வாறு ? கண்போது கொண்டரற் பூசித்துச் சக்கரம் கைக்கடைந்த பண்பேறு பத்தித் திருவினன் தங்காய் ! பலபொழுதும் கண்போ டுனை ஏத்தி நாவாற் பணி செய்துன் நற்பதத்தில் தண்போ திட அறி யேனெங்ங்ன் உய்வேன் தரணியிலே. (உ) தனது கண்ணையே பறித்து மலராக இட்டுச் சிவனைப் பூசித்துச் சக்கரம் பெற்ற பத்தியாளராம் திரு மாலின் தங்கையே! சதா உனைத் துதித்து உனது திருவடியில் மலரிட்டுப் பூசித்தலை அறியாத கான் இவ் வுலகில் எப்படிப் பிழைப்பேன் ? (கு) திருவினன்-திருமால். திருவிழிமிழலை என் னும் தலத்தில் ஆயிரம் பூக்கொண்டு திருமால் சிவன்ை அருச்சிக்க, ஒருநாள் ஒரு பூ குறையத் திருமால் தனது