பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 51 கண்ணையே பறித்துப் பூசித்துத் தாம்பெற விரும்பிய சக்ராயுதத்தைப் பெற்ருர் என்பது வரலாறு. நீற்றினை நிறையப் பூசி கித்தல் ஆயிரம் பூக் கொண்டு, ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக் கண் கிறைய இட்ட, ஆற்றலுக் காழி கல்கி அவன்கொணர்ந் திழிச்சும் கோயில், வீற்றிருந் தளிப்பர் விழி மிழலையுள் விகிர்த ேைர ” -அப்பர் 4-64-8. தண் போது-குளிர்ந்த மலர். 24. தேவியின் பிரதான தலங்கள் கஞ்சியிற் காமாட்சி யாகக் களிப்பாய்; மதுரையிலே வஞ்சி நீ மீனுட்சி என்றே வயங்குவாய், காசியிலே அஞ்சொல் உமை விசாலாட்சியாக அருள்புரிவாய் ; செஞ்சொலார் நாகையில் லோட்சி என்றே திகழுவையே. (உ) காஞ்சியிற் காமாட்சி என்னும் பெயருட லும், மதுரையில் மீட்ைசி என்னும் பெயருடனும், காசியில் விசாலாட்சி என்னும் பெயருடனும், காகப் பட்டினத்தில் நீலாயதாட்சி என்னும் பெயருடனும் தேவி நீ விளங்கி வீற்றிருந்து அருள்புரிகின்ருய். (கு) கஞ்சி-காஞ்சீபுரம். கா-என்னும் சரஸ்வதி யையும், மா-என்னும் ல்சஷ்மியையும் தனது கண்களாக உடையவள் காமாட்சி. தேவி அநுபூதி 15-ஆம் பாட லின் குறிப்பைப் பார்க்க. மீனுட்சி - மீன்போன்ற கண் க2ளயுடையவள் , தமிழில் அங்கயற்கண்ணி, விசா லாட்சி விசாலமான கண்களையுடையவள். நீலோற் பலம் அனய கண்களைக் கொண்டவள். நீலாய தாட்சி.