பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 53 உள்ளத்தில் உதித்து ஒடுங்குகின்ற உண்மை எளியர் அறியும் தரத்ததா - அன்று என்றபடி, (கு) தேவிக்கும் தாமரை ஆசனம் உண்டு : முக் கண்ணி. . . . விரும்பும் வெண்தாமரை -திருமந்திரம்1067. பத்மாஸ்ைைய " - ரீலலிதா ஸஹஸ்ரநாமம்278. 'அம்புயமேல் திருந்திய சுக்தரி' - அபிராமி அங் தாதி-5. ஆடகத் தாமரை ஆரணங்கே - டிெ 80. ' அளியார் கமலத்தில் ஆரணங்கே , - டிெ 82. வளி காற்று. 27. பத்தி நிலை பெற அள்ளிக் கொளத்தக்க அன்பே பெருகும் அழகுடையாய் ! உள்ளத்தின் உள்ளே உணர்பவர் உள்ளத் துறைகுவை நீ பள்ளத்தில் வீழ்நீர் எனும்பத்தி நீர்மை பரிந்தளித்தி தள்ளப் படாதிந்த விண்ணப்பம் தாயே! தயாகிதியே! (உ) தாயே! அன்புகிறை அழகி ! உன்னை உள் ளத்தில் உணர்பவர் தம் உள்ளத்தில் உறைபவள் நீ! பள்ளத்தில் விழும் நீரின் வேகத்துக்கு கிகரான பக்தி ஒட்டத்தை எனக்கு அன்புடன் அருளுக ; இந்த என் விண்ணப்பத்தைத் தள்ளிவிடாதே. (கு) பக்தி வேகத்தைப் பள்ளந்தாழ் உறுபுனலில் பதைத்துருகும் ' - என்ருர் திருவாசகத்தில் 5-21. பக்தி நீர்மை - பக்திக்குண்ம். 28. என் குறைகள் பல பத்தர்ப் பிரியையுன் பாத மலரைப் பணியகில்லேன் நித்தத் துவத்தைப் பெறக்கற்றி லேன்யான் கியதியில்லேன் கத்திப் பணிவார் தமையும் பணியேன், மெய்ஞ் ஞானியர்தம் சித்தத் திருந்தொளிர் தேவி ! இமயச் சிலைமகளே !